ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வறுமையை ஒழித்தல் தொடர்பில் முக்கிய கவனம் : தாரக

Published By: R. Kalaichelvan

29 Nov, 2019 | 03:27 PM
image

(ஆர்.விதுஷா)

வறுமையை  ஒழித்தல் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்தி முன்னேற்றகரமான  நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்  தாரக பலசூரிய சமுர்த்தி கொடுப்பனவு பெறும்  குடும்பங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அவர்களுக்குரிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி  கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார்.

சமுர்த்தி  உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்  தொடர்பில் கவனம் செலுத்தி அதனை நிவர்த்திசெய்வதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  

சமூக வலுவூட்டல் இராஜாங்க  அமைச்சராக  தாரக பலசூரிய  கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு மகளிர் ,சிறுவர்கள் விவகாரம்  மற்றும்  சமூக வலுவூட்டல்  அமைச்சில இன்று இடம் பெற்றது . இதன்  போது  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும்  கூறியதாவது   , புதிய  பாதை  பயணத்தில் பங்கு கொள்வதற்கு இளம்  அமைச்சர்களை தெரிவு செய்தமையை  முன்னிட்டு ஜனாதிபதி  கோத்தாபய  ராஜபக்ஷவிற்கு எனது  நன்றிகளை  தெரிவித்துக்கொள்கின்றேன். 

எனக்கு  கிடைக்கப்பெற்றுள்ள பொறுப்பை சரிவர நிறைவேற்ற நம்பிக்கையுடன்  செயற்படுவேன். எனது தந்தையின் வழியிலேயே  எனக்கு  அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைத்தது.

எனது பணியை சரிவர நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளேன் என அவர் தெரித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22