பாகிஸ்தானுடன் மோதும் இலங்கை அணிக்குழாம் இதுதான்!

Published By: Vishnu

29 Nov, 2019 | 02:44 PM
image

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணிக் குழாமினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற லாகூர் தாக்குதலின் பின்னர்  இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது இது இரண்டாவது தடவையாக அமைந்துள்ளதுடன், அதன் பின்னர் அங்கு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளமை இது முதலாவது சந்தர்ப்பமாகும்.

அதன்படி பாகிஸ்தானுக்கு அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட சர்வதேச டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

முதலாவது போட்டி டிசம்பர் 11 தொடக்கம் 15 ஆம் திகதி வரை ராவல்பிண்டியிலும், இரண்டாவது போட்டி 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை கராச்சியிலும் இடம்பெறவுள்ளது.

இந் நிலையில் தொடரில் விளையாடும் திமுத் கருணாரத்ன தலைமையிலான 16 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் அணிக்குழாமைனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளையாட்டுத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் ஒப்புதலுடன் வெளியிட்டுள்ளது.

1. திமுத் கருணாரத்ன - தலைவர்

2. ஓசத பெர்ணான்டோ

3. குசல் மெண்டீஸ்

4. அஞ்சலோ மெத்தியூஸ்

5. தினேஷ் சந்திமால்

6. குசல் ஜனித் பெரேரா

7. லஹிரு திரிமான்ன

8. தனஞ்சய டிசில்வா

9. நிரோஷன் திக்வெல்ல

10. தில்றூவான் பெரேரா

11. லசித் எம்புலுதெனிய

12. சுரங்க லக்மால்

13. லஹிரு குமார

14. விஷ்வ பெர்ணான்டோ

15. கசூன் ராஜித

16. லக்ஷான் சந்தகான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21