இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கின்றேன்- மோடி

Published By: Priyatharshan

29 Nov, 2019 | 03:02 PM
image

இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம் , நீதி, சமாதனம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று முன்னெடுக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அதேவேளை, ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகுமெனவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின்னர் உரையாற்றும் பேதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நரேந்திர மோடி மேலும் தெரிவிக்கையில்,

கோத்தாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு வருகைதந்தமை மிகவும் சந்தேசமான விடயம். இந்தியா 400 மில்லியன் டொலரை இலங்கைக்கு கடனாக வழங்கவுள்ளது. 

இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்ற வழங்கப்படும் கடன் 400 மில்லியனாக நீடிக்கப்படும். இந்திய அரசின் உதவியுடன் 46 ஆயிரம் வீடுகள் இதுவரை நிர்மாணிக்கப்பட்டள்ளன. மலையகப் பகுதிகளில் மேலும் 14 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. சூரிய சக்தி மின் திட்டத்திற்காக 100 மில்லியன் டொலர் கடனாக வழங்கப்படும்.

இந்தியா எப்போதும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறது. பயங்கரவாதத்திற்கெதிரான செயற்பாடுகளுக்காக இந்தியா 50 மில்லியன் டொலரை இலங்கைக்கு கடனாக வழங்கவுள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம் , நீதி, சமாதனம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன்.

அத்துடன் 13 ஆவது அரசியலமைப்பு திருத்த அமுலாக்கம் ,இலங்கையின் வடக்கு கிழக்கு அபிவிருத்தி ,இந்திய வம்சாவவழி தமிழர் பகுதி அபிவிருத்தி உட்பட விடயங்கள் ,வீடமைப்பு போன்றவற்றிக்கான இந்தியாவின் உதவிகள் தொடரும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து நாங்கள் கருத்து பரிமாறிக் கொண்டோம். 13வது திருத்த அமுலாக்கம் – தமிழரின் சமத்துவம் ,உரிமை அவர்களுக்குரிய கெளரவத்தை உரிய முறையில் வழங்கும் திட்டத்தை அரசு முன்னெடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.

நாங்கள் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை பின்பற்றுகின்றோம். அந்தவகையில், ஸ்திரமான மற்றும் வளமான முன்னேற்றகரமான இலங்கை இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்த விடயம். இது முழு இந்து சமுத்திரத்திற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15