இலங்­கையின் ஜனா­தி­பதி கோத்­த­பாய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு இந்­தியா நினை­வூட்ட வேண்டும் - களஞ்­சியம்

Published By: R. Kalaichelvan

29 Nov, 2019 | 11:49 AM
image

இந்­தி­யா­வுக்கு பயணம் மேற்­கொண்­டுள்ள  இலங்­கையின்  புதி­ய ­ஜ­னா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ  இந்­தி­யா­வுக்­கு­ கொ­டுத்த வாக்­கு­று­தி­யினை நிறை­வேற்ற வேண்டும் என்­ற ­கட்­ட­ளை­யினை இந்­தி­ய­ அ­ரசு நினை­வூட்­ட­ வேண்டும் என தமி­ழ­கத்தின்  இயக்­கு­னரும் தமிழ் தேசிய உணர்­வா­ள­ரு­மான மு.களஞ்­சியம் தெரி­வித்தார்.

முல்­லைத்­தீ­வுக்கு பய­ணம் ­மேற்­கொண்­டுள்ள இவர் நேற்று அங்கு நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது, இந்­தி­யா­விலிருந்து இலங்­கைக்கு வந்தேன். பத்து ஆண்­டுகள் போர்­ மு­டிந்து இலங்கை மண் எப்­படி இருக்­கின்­றது என்­று­ பார்ப்­ப­தற்­காக பய­ணம் ­மேற்­கொண்டேன். போரின் பின்னர் அதன் வலியால் துன்­புற்­றுக்­கொண்­டி­ருக்­கக்­கூடிய மக்­களை நேர­டி­யாக சந்­திக்க­ வேண்டும். போர் ­ந­டை­பெற்­ற­ ப­குதி என்­ன­ சூ­ழலில் இருக்­கின்­றது என்று நேர­டி­யாக காண­வேண்டும் என்ற நோக்­கத்­துடன் வந்­துள்ளேன்.

இங்­கு­ வந்து மக்­க­ளை­ச் சந்­தித்து அவர்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டி­ய­ சிக்­கல்கள் குறித்து பேசு­கின்­ற­பொ­ழுது பல்­வேறு உண்­மை­களை நான்­ அ­றிந்­து­கொள்­ள­ மு­டிந்­தது. கொழும்பில் இருந்து  பலாலி விமான நிலையம் வந்து அங்கு யாழ். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை சந்­திப்­ப­தற்­காக பல்­க­லைக்­க­ழ­கத்­தி­னை­ சுற்றிப் பார்ப்­ப­தற்­கா­க­ சென்­றி­ருந்தேன்.

பல்­க­லைக்­க­ழகம் மூடப்­பட்­டி­ருந்­தது மாண­வர்­கள்­ வீ­தியில் நின்­றி­ருந்­தார்கள். மாண­வர்கள் மாவீ­ரர்கள் நிகழ்­வினை கொண்­டா­ட­க்கூ­டாது என்­ப­தற்­காக பல்­க­லைக்­க­ழகம் மூடப்­பட்­டிருந்தது. சிறப்­பு­ அ­னு­மதி வாங்கி நான் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்குள் சென்று அங்கு இருக்­கக்­கூ­டிய பல்­து­றை­க­ளையும் தெரிந்­து­கொண்டேன். அத­னை­த்தொ­டர்ந்­து நான் முல்­லைத்­தீ­வுக்கு பய­ணம்­ மேற்­கொண்டேன் அங்கு போர் நடந்த பகு­தி­களை பார்­வை­யிட்­ட­துடன் மக்­களை சந்­தித்து பேசினேன்.

­கோப்பாய் மாவீரர் நாள் நிகழ்வில் பங்­கெ­டுத்தேன் வெறும்­தொ­லைக்­காட்­சி­களில் இத­னை­ப்பார்த்­தி­ருந்த நான் நேற்­றுத்தான் உணர்­வு­பூர்­வ­மாக மக்கள் மாவீ­ரர்­ தி­னத்­தினை எவ்­வா­று­ கொண்­டா­டு­கின்­றார்கள் என்­பதை நேர­டி­யாகக் கண்டு அனு­ப­வப்­பட்டேன். இன்று ஸ்ரீலங்­காவில் புதி­ய­தாக பொறுப்­பேற்­று­ இ­ருக்­கக்­கூ­டிய கோத்­த­பா­ய­ ரா­ஜ­பக் ஷ இன்று இந்­தி­யா­வுக்கு முதல் முறை­யா­க­ செல்­லு­கின்றார்.

அவர் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­ ஏற்­ற­பின்னர்  முதல் வெளி­நாட்டு பய­ண­மாக இந்­தி­யா­வுக்­கு ­செல்­வது மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது. இந்­தி­ய­ அ­ர­சாங்கம் போர்க்கால­கட்­டத்தில் இலங்­கையில் நடந்­த­ உள்­நாட்­டு­ப்போ­ரினை முடி­விற்கு கொண்­டு­ வ­ர­வேண்டும் என்று இலங்­கை­ அ­ர­சுடன் இணைந்து இந்­தி­ய­ அ­ர­சாங்கம் செயற்­பட்­ட­போது அன்­றை­ய ­ஜ­னா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷ  இந்­தி­யா­விற்கு பல வாக்­கு­று­தி­க­ளைக்­கொ­டுத்­தி­ருந்தார். 

அதில் ஒன்று 13ஆம் சட்­டப்­பி­ரி­விற்கும் மேல­தி­க­மான அதி­கா­ரத்­தினை தமி­ழர்­க­ளுக்கு நாம் வழங்­குவோம் என்­று­ சொன்னார். சிவ­சங்­கர்­மேனன், ஆர்.கே.நாரா­யணன் போன்­ற­வர்கள் எல்லாம் அந்த வாக்­கு­று­தி­யினை பெற்று இந்­தி­ய­த­லைமை அமைச்­ச­ருக்கு சொன்­னார்கள் தமி­ழ­கத்­தி­னை­ ஆண்ட கரு­ணா­நி­திக்கும் அந்த செய்­தி­ சொல்­லப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் கடந்த பத்து ஆண்­டு­களில் அன்று கொடுத்­த­ வாக்­கு­று­தி­களை இலங்­கை­ அ­ரசு நிறை­வேற்­றி­யதா என்­று­ கேட்டால் நிறை­வேற்­ற­வில்லை என்­பதை நான்­ அ­றிந்­தி­ருக்­கின்றேன். இன்று இந்­தி­யா­விற்கு பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்­கையின்  புதி­ய­ ஜ­னா­தி­பதி  இந்­தி­யா­விற்­கு­ கொ­டுத்த வாக்­கு­று­தி­யினை நிறை­வேற்ற வேண்டும் என்­ற­ கட்­ட­ளை­யினை இந்­தி­ய­ அ­ரசு நினை­வூட்­ட­வேண்டும்.

 இங்­கு­ போ­ரிற்கு பின்னர் மன­வ­லியில் வாழ்ந்து  கொண்­டி­ருக்­க­க்கூ­டிய ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கு ஒரு­ ம­ருந்­தி­டு­கின்ற ஆறு­த­லான செய்­தி­யாக அது இருக்கும் என்று நான் நினைக்­கின்றேன். இந்­தி­யாவின் வெளி­வி­வ­கா­ர­ அ­மைச்­ச­ராக பிர­ணாப்­ மு­கர்ஜி இருந்­த­போது எந்­தெந்­த­ வாக்­கு­று­தி­களை இலங்கை முன்­னாள் ­ஜ­னா­தி­பதி மஹிந்த ராஜ­­பக் ஷ கொடுத்­தாரோ அந்த வாக்­கு­று­தி­களை இன்று பத­வியில் இருக்­கக்­கூ­டிய கோத்­த­பா­ய­ ரா­ஜ­­பக் ஷ நிறை­வேற்­ற­ வேண்டும் என்ற கோரிக்­கை­யினை தமி­ழர்கள் சார்பில் முன்­வைக்­கின்றோம். 

இங்கு இருக்­கக்­கூ­டிய மக்கள் பெரும் அச்­சத்­துக்கு உட்­பட்டு இருக்­கின்­றார்கள். போர்க்­கா­லத்தில் இரா­ணு­வ ­பொ­றுப்பில் இருந்த ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வந்­தி­ருப்­பதால் அந்­த­ அச்சம்  எல்­லோரின் மன­திலும் படர்ந்­தி­ருக்­கின்­றது. இலங்கை இரா­ணு­வம் ­போ­ரிட்­டது  விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரா­கவே அன்றி ஈழத்தில்  இருக்­கக்­கூ­டிய மக்­க­ளுக்கு எதிராக இல்லை என்கின்ற உணர்வினை இந்த அரசு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் இந்த மக்கள் அச்சத்தில் இருந்து விடுபட்டு அரசுடன் இணைந்து அச்சமற்ற வாழ்க்கையினை வாழ முடியும் என்று நான் கருதுகின்றேன்.

அதேபோல் நில ஆக்கிரமிப்பிற்கு   உட்பட்ட பகுதிகளில் இருந்து அவரவருக்கு உரிய நிலங்களை இந்த அரசு கொடுக்கவேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் குறித்த விபரங்கள் வேண்டும் என்று மக்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருப்பதை நான் அறிகின்றேன். அதற்கான முறையான சட்டரீதியான நடவடிக்கைகளையும் மஹிந்த ராஜ­பக் ஷவின் காலத்தில் ஏற்பட்ட சறுக்கல்களை எல்லாம் சரிசெய்து புதிய ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு சரியான வழிகாட்டுதலை ஏற்படுத்துவார் என்று நான் நம்புகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48