ஏமனில் படகைக் கடத்தி தப்பிய குமரி மீனவர்கள் லட்சத் தீவில் தத்தளிப்பு..!

Published By: Daya

29 Nov, 2019 | 09:35 AM
image

சம்பளம் மற்றும்  உணவு வழங்காத உரிமையாளருக்குப் பாடம் புகட்டுவதற்காக, ஏமனிலிருந்து விசைப்படகைக் கடத்தி குமரிக்குத் தப்பிசென்ற மீனவர்கள், டீசல் தீர்ந்ததால் லட்சத்தீவில் தத்தளிக்கின்றனர்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த ஆல்பிரட் நியூட்டன், எஸ்கலின், வினிஸ்டன், பெரியக்காட்டைச் சேர்ந்த விவேக், மணக்குடியைச் சேர்ந்த சாஜன், உவரியைச் சேர்ந்த சகாய ரவிக்குமார், குளச்சலைச் சேர்ந்த ஜெகன் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 9 மீனவர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏமனுகுச் சென்றனர்.

அங்கு, சவூதி அரேபியாவைச் சேர்ந்த சுல்தான் என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்து அவருடைய விசைப் படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், விசைப்படகு உரிமையாளர் சுல்தான் இந்த மீனவர்களுக்குத் தினமும் ஒரு வேளை மட்டும் உணவு வழங்கியதாகவும், வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து இதுவரை சம்பளம் கொடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பளம் வழங்காத சுல்தானுக்குப் பாடம் புகட்டவும், குறித்த நபரிடமிருந்து தப்பிச் செல்லவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 19ஆம்  திகதி மீன் பிடிக்கச் செல்வதாகக் கூறி விசைப்படகில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், அந்தப் படகில் இந்தியா செல்ல முடிவெடுத்தனர். அதன்படி, ஏமனிலிருந்து லட்சத்தீவு கடல் பகுதியை அடைந்தனர். அங்கிருந்து, கேரள மாநிலத்தின் கொச்சி துறைமுகம் அல்லது கன்னியாகுமரி மாவட்டத்தின் குறைச்சல் துறைமுகத்தை அடைய வேண்டும் என்பது அவர்களின் திட்டம்.

ஆனால், விசைப்படகிலிருந்த டீசல் தீர்ந்துவிட்டதால் லட்சத்தீவு பகுதியில் நங்கூரம் பாய்ச்சி படகை நிறுத்திய மீனவர்கள், குமரி மாவட்டத்தில் உள்ள உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். ஏமனிலிருந்து படகைக் கடத்தி வருவதை அறிந்து பதறிப்போன உறவினர்கள், இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சிலுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர், மீனவர்களின் உறவினர்களை அழைத்துக் கொண்டு நாகர்கோவில் ஆட்சித்தலைவர் அலுவலகம் சென்று, விபரம் அனைத்தையும் கூறி லட்சத்தீவில் தத்தளிக்கும் மீனவர்களுக்கு உதவும்படி ஆட்சித்தலைவருக்குக் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து சர்ச்சில் கூறுகையில்,

“படகைக் கடத்தி வந்தது தவறான செயல்தான். ஒரு வருடமாகச் சம்பளம் கொடுக்காததாலும், அடிமைபோல் நடத்தியதாலும் எப்படியாவது உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில்தான் மீனவர்கள் அப்படிச் செய்துள்ளனர்.

எனவே, குறித்த மீனவர்களுக்கு உதவி செய்வதுடன் , அவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனத் தமிழக மற்றும் கேரள அரசுகளுக்குக் கோரிக்கை வைக்கிறோம்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21