அமெரிக்க பெண்ணிடம் மன்னிப்புக் கோரிய டிக்டொக்

Published By: Digital Desk 3

28 Nov, 2019 | 05:21 PM
image

சீனாவில் முஸ்லிம்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக விமர்சித்து டிக்டொக் செயலியில் வீடியோ வெளியிட்டிருந்த அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண்ணின் கணக்கு முடக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு சீன டிக்டொக் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளதுடன், அவரது கணக்கை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த  இளம் பெண் பெரோசா அசிஸ் என்பவர் சமீபத்தில் 40 விநாடிகள் ஓடக் கூடிய டிக்டொக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பெண்கள் மேக்அப் போடுவது குறித்த செய்முறை போன்று தொடங்கும் வீடியோவில் சீனாவில் முஸ்லிம்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார். அந்த வீடியோவை சுமார் 1.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

மேலும், 5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்நிலையில், ஃபெரோசா அசிஸின் டிக்டொக் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது.

இதுகுறித்து தெரிவித்துள்ள பெரோசா அசிஸ், ‘டிக்டொக் என்னுடைய பக்கத்தை ஒரு மாதத்துக்கு முடக்கியுள்ளது. இது ஒன்றும் என்னை அமைதிப்படுத்தாது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள டிடிக்டொக் நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த 17 வயதான பெரோசா அசிஸ் மீது ஏற்கனவே மற்றொரு வீடியோ தொடர்பாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதற்கும் சீனாவின் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், அவரது குறிப்பிட்ட காணொளி நீக்கப்பட்டதற்கு 'மனித தவறுகளே' காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் தலைநகர் பீஜிங்கை சேர்ந்த பைட்டான்ஸ் எனும் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டொக், தங்களது உள்நாட்டு (சீனா) உள்ளடக்க கட்டுப்பாட்டு விதிமுறைகள் சீனாவிற்கு வெளியே உள்ள இடங்களுக்கு பொருந்தாது என்று கூறுகிறது.

எனினும், டிக்டொக் நிறுவனத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அசிஸ் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அசிஸ்  கூறினார் "நான் இதைப் பற்றி தொடர்ந்து பேசுவேன், அதைப் பற்றி டுவிட்டரில், இன்ஸ்டாகிராமில், என்னிடம் இருக்கும் எந்த தளத்திலும், டிக்டொக் செயலியிலும்  கூட பேசுவேன்.

"இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னரும் நான் டிக்டொக்கைப் பற்றி பயப்படவில்லை. டிக்டொக்கைப் பற்றி நான் பயப்பட மாட்டேன்."

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52