சுகாதார அமைச்சின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்ற சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சார்ல்ஸ்

Published By: Vishnu

28 Nov, 2019 | 12:02 PM
image

சுகாதார அமைச்சின் செயலாளருக்கான தனது உத்தியோகபூர்வ கடமைகளை நேற்று வரை சுங்கத்தின் திணைக்களத்தின் பணிப்பாளராகவிருந்த பி.எஸ்.எம்.சார்ல்ஸ் இன்று காலை 9.30 மணிக்கு பொறுப்பேற்றார்.

முன்னைய அரசாங்கத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அவர் பின்னர், குறித்த திணைக்கள அதிகாரிகளின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மீண்டும் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந் நிலையிலேயே இடைக்கால அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டு, தனது கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளார். 

இதனால் அவர் வகித்த சுங்கப் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் தற்போது, அந்த பதவியும் வெற்றிடமாகியுள்ளது. 

இரு­பது புதிய அமைச்­சுக்­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள செய­லா­ளர்­க­ளுக்­கான நிய­மனக் கடி­தங்­களை வழங்கும் நிகழ்வு  ஜனா­தி­பதி கோத்­தபாய ராஜ­பக் ஷ   தலை­மையில் நேற்று  பிற்­பகல் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது.

புதிய செய­லா­ளர்­களின் விப­ரங்கள் பின்­வ­ரு­மாறு,

திரு­மதி. எஸ்.எம்.மொஹமட் – சுற்­றுலா மற்றும் விமான சேவைகள், ஆர்.டபிள்யு.ஆர் பேம­சிறி– வீதி மற்றும் பெருந்­தெ­ருக்கள், ஜே.ஜே.ரத்­ன­சிறி – நீதி,  மனித உரி­மைகள் மற்றும் சட்ட மறு­சீ­ர­மைப்பு, ரவீந்ர ஹேவா­வி­தா­ரன – பெருந்­தோட்ட, கைத்­தொழில் மற்றும் ஏற்­று­மதி விவ­சாயம், ஜே.ஏ.ரஞ்சித்  – கைத்­தொழில் மற்றும் வளங்கள் முகா­மைத்­துவம், டி.எம்.ஏ.ஆர்.பி.திசா­நா­யக்க – உயர்­கல்வி  தொழில்­நுட்பம் மற்றும் புத்­தாக்கம், எச்.எம்.காமினி செனெ­வி­ரத்ன – பய­ணிகள் போக்­கு­வ­ரத்து முகா­மைத்­துவம், டபிள்யு.ஏ.சூலா­னந்த பெரேரா – தகவல் தொடர்­பாடல் தொழி­ல்நுட்பம், திரு­மதி. வசந்தா பெரேரா – மின்­சக்தி மற்றும் வலு­சக்தி, எம்.எம்.பி.கே.மாயா­துன்னே – துறை­முக மற்றும் கப்பல் போக்­கு­வ­ரத்து, எஸ்.ஹெட்­டி­யா­ரச்சி – பொது நிர்­வாகம் உள்­நாட்­ட­லு­வல்கள்  மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி, ஆர்.பி.ஆரி­ய­சிங்க – வெளி­நாட்­ட­லு­வல்கள், திரு­மதி ஏ.எஸ்.எம்.எஸ்.மஹா­னாம – மகளிர் சிறுவர் விவ­கா­ரங்கள் மற்றும் சமூக பாது­காப்பு, திரு­மதி ஜே.எம்.சி.ஜயந்தி விஜே­துங்க சுற்­றாடல் மற்றும் வன ஜீவ­ரா­சிகள் வள அமைச்சு, ஆர்.ஏ.ஏ.கே.ரண­வக்க – காணி மற்றும் காணி அபி­வி­ருத்தி, எம்.பி.டி.யு.கே.மாபா பத்­தி­ரன – கைத்­தொழில் ஏற்­று­மதி மற்றும் முத­லீட்டு மேம்­பாடு, திரு­மதி ஆர்.எம்.ஐ.ரத்­னா­யக்க – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள், திரு­மதி. பி.எஸ்.எம்.சார்ல்ஸ் – சுகா­தார மற்றும் சுதேச மருத்­துவ சேவைகள், என்.பி.மொன்டி ரண­துங்க – சிறிய  நடுத்­தர அள­வி­லான வர்த்­தக மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி, கலாநிதி பிரியத் பந்து விக்ரம – நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19