ஆட்சி மாற்­றம் நம்­பிக்­கை­யீ­னத்தை கோடிட்டுக் காட்­டு­கி­றது: ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சி

Published By: J.G.Stephan

28 Nov, 2019 | 11:23 AM
image

அண்­மைய ஆட்சிமாற்­றம் நம்­பிக்­கை­யீ­னங்­களை கோடிட்டு காட்­டு­கின்­றது என ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியின் ஊடக போச்­சாளர் க. துளசி தெரி­வித்­துள்ளார். இது குறித்து அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

மானிட விடு­த­லையை நேசித்து தம்மை ஆகு­தி­யாக்­கி­யோரை நினைவில் கொள்ளும் மகத்­தான நாள் மாவீ­ரர் நாள். தமது இனம் வாழ்­வு­ரிமை இழந்து தமது நாட்­டுக்­குள்­ளேயே ஏதி­லிகள் ஆக்­கப்­பட்டு சிறை­களில் அடைக்­கப்­பட்டு வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கப்­பட்டு அகிம்சை முறை­யிலும் அர­சியல் ஊடா­கவும் தீர்­வுகள் எட்­டப்­படா நிலையில் தமது சந்­த­தி­யா­வது இலங்கை தீவில் தங்­க­ளது பூர்­வீக நிலங்­களில் ஆட்சி உரித்­துடன் வாழ்­வ­தற்கு தமது இளமைக் காலங்­களை துறந்து உற­வு­களை பிரிந்து தமது இன்­னு­யிரை அர்­ப­ணிக்க புறப்­பட்ட அற்­பு­த­மா­ன­வர்­கள்தான் எமது மாவீ­ரர்கள். அவர்­களின் தியா­கங்­க­ளையும் மாண்­பு­க­ளையும் நினை­வில்­கொள்ளும் புனித நாள்.

 அன்­பான உற­வு­களே! எமது விடுத­லைப் ­போ­ராட்டம் போரா­ளி­க­ளது அதிஉச்ச தியா­கங்­க­ளும் எமது மக்­களின் பேரா­த­ரவு கார­ண­மா­கவும் உல­கத்­தின்பால் எமது போராட்­டத்தின் நியா­யா­திக்­கமும் எமது விடு­த­லைப்போ­ராட்­டத்­துக்கு வலுச்­சேர்த்­தி­ருந்­தது. இருந்தும் 2009 பிராந்­திய நலன் சார்ந்து எமது விடு­த­லைப்­போ­ராட்டம் பயங்­க­ர­வாத முத்­திரை குத்­தப்­பட்டு பெரும் மனித பேர­வ­லத்­துடன் முள்­ளி­வாய்க்­காலில் முடித்து வைக்­கப்­பட்­டது.  தமி­ழி­னத்தின் அர­சியல் உரி­மை­க­ளுக்கு வலு­சேர்த்த ஆயு­தப்­போ­ராட்டம் இழக்­கப்­பட்­டி­ருக்கும் இந்­நி­லையில் தமிழர் தரப்பு அர­சியல் வடி­வத்தின் அதி உச்ச செய­லாற்­றுகை பெரும் நம்­பிக்­கை­யீ­னங்­க­ளையே அண்­மைய ஆட்­சி­மாற்ற  முடி­வுகள் கோடிட்­டுக்­காட்­டு­கின்­றன. ஆகவே எதிர்­கால தாயக அர­சியல் பரப் பில் புதிய முனைப்­புகள், புதிய சிந்­த­னைகள், புதிய முகங்கள் தொடர்பில் எமது மக்கள் சிந்­திக்க தலைப்­பட்­டுள்­ளனர். 

குறிப்­பாக பிராந்­திய அர­சி­ய­லு­றவு தொட ர்பில் இந்­தியா தனது நண்­பர்கள் யார் என்­ப­தனை மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும் என வலி­யு­றுத்­து­கிறோம். இந்­தியாவின் உண்­மை­யான நண்­பர்கள் தமி­ழர்­களே. இலங்­கையின் எதிர்­கால ஆட்சி உரி­மை­களில் தமி­ழர்­களின் நலன் சார்ந்து தமிழர் தரப்பு பங்­காற்ற முய­ல­வேண்டும். 

எம் புலம்­பெயர் உற­வு­களே இனிவரும் காலங்­களில் வாழ்­வா­தார உத­வி­க­ளோடு நின்­று­வி­டாமல் நீங்கள் கற்­று­ணர்ந்த உங்­களின் தொழில் புல­மை­யி­னையும் பெரு­ம­ள­வி­லான முத­லீ­டு­க­ளையும் வடக்கு கி­ழக்கில் ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும். பொரு­ளா­தா­ர­ரீ­தி­யாக நலி­வுற்­றுள்ள எமது இனம் மீட்­சி­பெற வழி­வ­குக்கும். அதே­போன்று செய்­யப்­ப­டு­கின்ற முத­லீ­டு­க­ளுக்­கான பாது­காப்­பினை எமது அர­சியல் தலை­மைகள் உரு­வாக்க வேண்டும்.

தாயக அர­சியல் நிைல­மை­களைக் கருத்திற் கொண்டும் தாயக மக்­களின் அவ­லங்­களை கருத்­திற்­கொண்டும் புலம்பெயர் அமைப்­புக்­களும் சாத்­தி­யப்­பா­டான தீர்­வு­களை எட்­டு­வ­தற்கும் தாயக அர­சியற் பரப்பில் செய்­யப்­பட்ட எல்லாத் தியா­கங்­களின் பேரிலும் ஒற்றை இலக்­கு­களை நோக்கி பய­ணிக்கும் ஓர் அர­சியல் செல்நெறிப் போக்கை கட்­ட­மைக்க தமது பய­னு­றுதி மிக்க காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை நல்க வேண்­டு­மெ­னவும் கேட்­டுக்­கொள்­கின்றோம். 

நாம் என்­றுமே மாவீ­ரர்­களின் தியா­கத்துக் கும் மக்­களின் உணர்­வு­க­ளுக்கும் கட்­டுப்­பட்டே  பய­ணிப்போம் எனவும் எமது மாவீ­ரர்­களின் தியா­கங்கள் மீதேறி அர­சியற் பக­டை­யாட எவ­ரையும் அனு­ம­திக்க முடி­யா­தெ­னவும் இந்த மாவீரர் நாளிலே உறுதி பூணுகின்றோம். 

அதனடிப்படையில் தாயகத்திலும் சர்வ தேசமெங்கிலும் வாழ்கின்ற இந்தத் தேசத் துக்காய் தமது வாழ்நாளை அர்ப்பணித்த. போராளிகள், தேசப்பற்றாளர்கள், விடுத லைப் புலிகள் சார்ந்த கட்டமைப்புக்களை இணைத்துக்கொண்டு அவர்களது பாரிய பங்களிப் போடு எமது மக்களுக்கான ஓர் காத்திரமானதும் உண்மையானதுமான அரசி யல் பயணத்தை முன்னெடுக்க இந்தப் புனித நாளில் திடசங்கற்பம் பூணுகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31