ஆறு­முகன் தொண்­ட­மானின் வேண்­டு­கோ­ளுக்கு அமைய மலை­ய­கத்­துக்­கான பல்­க­லைக்­க­ழக ஆய்­வுகள் ஆரம்பம் - பி.பி. தேவராஜ்

27 Nov, 2019 | 05:08 PM
image

மலை­ய­கத்­துக்­கென தனி­யான பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை அண்மைக்கால­மாக வலுப்­பெற்று வந்­துள்­ளது. அதனைச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு இ.தொ.கா. தலைவர் ஆறு­முகன் தொண்­டமான் முனைப்­போடு இருக்­கின்றார். இது தொடர்­பாக என்­னுடன் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்­டி­ருந்தார். எனவே கல்­வி­யி­யலா­ளர்கள் கொண்ட குழுவை அமைத்து செயற்­ப­டுத்தும் பணி­களை ஆரம்­பிக்கத் தயா­ராக இருக்­கின்றேன் என 'கோப்­பியோ' தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பி.பி. தேவராஜ் தெரி­வித்­துள்ளார்.

 இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

மலை­யக மாண­வர்கள் உயர் ­கல்வி பெறு­வ­தற்கு தனி­யான பல்­க­லைக் ­க­ழகம் அமைக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட கால­மாக பேசப்­பட்டு வந்­துள்­ளது. அந்த ஆதங்­கத்தைப் புரிந்து கொண்ட இ.தொ.கா. தலைவர் மற்றும் அமைச்சர் ஆறு­முகன் தொண்­டமான், தாம் அமைச்சுப் பொறுப்பை ஏற்­ற­வுடன் முதல் கட­மை­யாக மலை­யக பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு செயல் வடிவம் கொடுக்க முன்­வந்­துள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்­தலின் போது இ.தொ.கா. அதன் 32 அம்சக் கோரிக்­கை­யிலும் இதனைக் குறிப்­பட்­டி­ருந்­தது. பொது­ஜன பெர­மு­னவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் இக்­கோ­ரிக்கை ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. கடந்த வாரம் அமைச்சர் ஆறு­முகன் தொண்­டமான் என்­னுடன்  இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டலை நடத்­தி­யி­ருந்தார். எந்த வித­மான கட்சி பேதங்­களும், அர­சியல் பேதங்­களும் இல்­லாமல் எனது தலை­மையில் அனை­வ­ரையும் உள்­வாங்கி அதற்­கான ஆக்­க­பூர்­வ­மான வேலைத் திட்­டங்­களை மேற்­கொள்­ளவும் தயா­ராக இருப்­ப­தாகத் தெரி­வித்தார்.

இது மலை­யக சமூ­கத்­துக்குத் தேவை­யான முக்­கி­ய­மான பணி என்­பதால் முழு மன­தோடு தகுந்த ஒத்­து­ழைப்பை வழங்கத் தீர்­மா­னித்­துள்ளேன். இதற்­காக பல்­க­லைக்­க­ழகப் பேரா­சி­ரி­யர்கள், ஓய்வு நிலைப் பேரா­சி­ரி­யர்கள் உட்­பட கல்­வித்­துறை சார்ந் ­த­வர்­களின் அபிப்­பி­ரா­யங்கள், ஆலோ­ச­னைகள் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. கல்விப் பணிக்­காக சமூ­கத்­தி­லுள்ள அனை­வ­ரையும் இணைத்துக் கொண்டு செயற்­பட முன்­வந்­துள்­ளமை ஆரோக்­கி­ய­மான விடயம் ஆகும். இதை நான் மன­தார வர­வேற்­கின் றேன்.

விரைவில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுடன் சந்­திப்பை ஏற்­ப­டுத்தி கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி ஆய்­வு­களை மேற்­கொள்ளத் தீர்­மா­னித்­துள்ளேன். பல வரு­டங்­க­ளாக பேசப்­பட்டு வந்த ஒரு விட­யத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்குக் கிடைத்­துள்ள அரிய சந்­தர்ப்­பத்தை நாம் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையான ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் தயங்காமல் முன்வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இந்த ஆக்கபூர்வமான முயற்சி அரசியல் ரீதியில் வெற்றி பெற பலரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04