வெளி­நாட்டு பயணத் தடை­களை தளர்த்­து­வ­தற்கு எப்.சி.ஐ.டி. ஆத­ரவு

Published By: Digital Desk 3

27 Nov, 2019 | 03:00 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் எப்.சி.ஐ.டி. எனப்­படும்  நிதிக் குற்றப் புல­னாய்வு பிரிவின் அதி­கா­ரி­களின் கோரிக்­கைக்கு அமைய  இரு வேறு குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் சந்­தேக நபர்­க­ளுக்கு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த வெளி­நாட்டுப் பய­ணத்­த­டைகள்  அதே விசா­ரணை அதி­கா­ரி­களின் ஆத­ர­வுடன் நேற்று தளர்த்­தப்­பட்­டன.

கோட்டை நீதிவான் நீதி­மன்றில் குறித்த விவ­கா­ரங்கள் விசா­ர­ணைக்கு வந்­த­போது  அந்த பய­ணத்­த­டை­களை நீக்­கு­வ­தற்கு தாம் எதிர்ப்­பில்லை என எப்.சி.ஐ.டி. அதி­கா­ரிகள் மன்றில் தெரி­வித்­ததை அடுத்து நீதிவான் ரங்க திஸா­நா­யக்க விடுக்­கப்­பட்­டி­ருந்த வெளி­நாட்டு பயணத் தடை­களை தளர்த்­தினார்.

அதன்­படி தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சாளர்  மொஹமட் முஸம்மில், அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  ஜயந்த சம­ர­வீர ஆகி­யோரின் வெளி­நாட்டுப் பய­ணத்­தடை முழு­மை­யா­கவும் மற்றும் பிறி­தொரு விவ­கா­ரத்தில் வெளி­நாட்டுப் பய­ணத்­தடை வழங்­கப்­பட்ட முன்னாள் சுங்க பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீர, சுங்க பணிப்­பாளர் தாரக சென­வி­ரத்ன ஆகி­யோரின் வெளி­நாட்டு பயணத் தடைகள் என்­பன தற்­கா­லி­க­மாக தளர்த்­தப்­பட்­டன.

ஜனா­தி­பதி செய­ல­கத்தின் வாக­னங்­களை தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­யமை, நம்­பிக்கை துரோகம் செய்­தமை, மோசடி செய்­தமை மற்றும் மோச­டிக்கு உடந்­தை­யாக இருந்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னர்கள் சில­ருக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணைகள் குறித்த வழக்கு நேற்று  கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க முன்­னி­லையில்  விசா­ர­ணைக்கு வந்­தன.

 இதன்­போது இந்த விவ­கா­ரத்தில் கைதாகி பிணை­யி­லுள்ள தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சாளர் மொஹமட் முஸம்மில்,  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயந்த சம­ர­வீர, சரத் வீர­வங்ச,  ஹேமந்த பெரேரா சேனா­ரத்ன டி சில்வா ஆகிய சந்­தேக நபர்கள் மன்றில் ஆஜ­ரா­கினர்.

இது குறித்த விசா­ரணை அறிக்கை  C5/15/2017 எனும் இலக்­கத்தின் கீழ் சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக விசா­ரணை அதி­கா­ரி­க­ளான

 எப்.சி.ஐ.டி.யினர் தெரி­வித்­தனர்.

இதன்­போது மொஹமட் முஸம்மில் மற்றும் ஜயந்த சம­ர­வீர ஆகியோர் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள்,  அவர்கள் தொடர்பில் விதிக்­கப்­பட்­டுள்ள வெளி­நாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரினர்.

இது தொடர்பில் நீதிவான் எப்.சி.ஐ.டி.யின்  நிலைப்­பாட்டை கோரிய போது, வெளி­நாட்டுப் பயணத் தடை நீக்­கப்­ப­டு­வ­தற்கு எந்த ஆட்­சே­ப­னையும் இல்லை எனக் கூறினர். அத­னை­ய­டுத்து நீதிவான் அவர்கள் குறித்த வெளி­நாட்டுப் பயணத் தடை­களை நீக்­கினார். இது குறித்த மேல­திக வழக்கு விசா­ரணை எதிர்­வரும் 2020 மார்ச் 31ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது.

இதே­வேளை பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செயலர், தற்­போ­தைய ஜனா­தி­பதி  கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் ஆலோ­சனை மற்றும் கோரிக்­கைக்கு அமைய,    அனு­ரா­த­புரம்  'சந்த ஹிரு சேய' நினைவுத் தூபியில் வைப்­ப­தற்­காக  தங்­கத்­தி­னா­லான சமாதி நிலை புத்தர் சிலையை அமைக்க யாழ்.  மாதகல் கடலில் கைப்­பற்­றப்­பட்ட ஒரு தொகை தங்­கத்தில்  8 கிலோவை  கடற்­ப­டைக்கு வழங்­கி­ய­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த  முன்னாள் சுங்கப் பணிப்­பாளர் நாயகம்  ஜகத் பீ விஜே­வீர மற்றும் முன்னாள் சுங்க மேல­திக பணிப்­பாளர்  தாரக சென­வி­ரத்ன  ஆகியோர் தொடர்பில் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த வெளி­நாட்டுப் பயணத் தடையை எதிர்­வரும் 2020 மார்ச் 31 வரை தளர்த்த நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் மன்றுக்கு வந்த போது, சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் வெளிநாட்டு பயணத் தடையை தளர்த்த கோரிய நிலையில் விசாரணை அதிகாரிகளான எப்.சி.ஐ.டி.யினர் அதற்கு எதிர்ப்பில்லை என்று தெரிவித்தனர். இதனையடுத்தே நீதிவான் ரங்க திஸா நாயக்க வெளிநாட்டு  பயணத் தடையை தளர்த்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31