பாராளுமன்ற மூன்றாம் கூட்டத்தொடர் முடியும் வரை கரு ஜெயசூரியவே சபாநாயகர் 

Published By: R. Kalaichelvan

27 Nov, 2019 | 02:16 PM
image

(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான தற்போதைய ஆளும் தரப்பினருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால்  எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முழுவதும் கரு ஜெனசூரியவே சபாநாயகராக கடமையாற்றுவார் என்ற தீர்மானத்திற்கு அரசாங்கம் வந்துள்ளது.

 டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்துடன் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவும் மார்ச்சில் பாராளுமன்றத்தை  கலைக்கவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. 

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பினர் தமக்கான சபாநாயகர் ஒருவரை நியமிக்கும் முயற்சிகளை முன்னெடுத்தனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சபாநாயகராக நியமிக்கும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வாசுதேவ நாணயக்கார எம்.பிக்கு சபாநாயகர் பொறுப்பு கொடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் தீர்மானம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

அடுத்த மாதம் 3 ஆம் திகதி கூடும் பாராளுமன்ற அமர்வுகளின் போது ஆளும் கட்சியின் சார்பில் வாசுதேவ நாணயக்கார எம்.பியின் பெயரை சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்க இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது. 

எவ்வாறு இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் சபாநாயகராக செயற்பட்டால் தான் ஒதுங்கிக்கொள்வதாக வாசுதேவ நாணயக்கார எம்.பி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று ஆளும் கட்சி தலைவர்களின் கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையை கொழும்பில் கூடியது.

இதன்போது பாராளுமன்ற பதவிகள் எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்ற காரணிகளும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில் தற்போது அரசாங்கம் ராஜபக்ஷவினர் வசம் இருந்தாலும் கூட பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஐக்கிய தேசிய முன்னணி வசமுள்ள காரணத்தினால் சபாநாயகர் பதவியை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் உள்ளதை அறிந்துகொண்ட ஆளும் கட்சியினர் தற்போது சபாநாயகர் பதவியில் கைவைப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளனர். 

இது குறித்து வாசுதேவ நாணயக்கார எம்.பி கூறுகையில்:- அரசாங்கம் எமது கரங்களில் இருந்தாலும் கூட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரம் எம்மிடம் இல்லை.

இன்னமும் ஐக்கிய தேசிய முன்னணியினர் வசமே பாராளுமன்ற அதிகாரம் உள்ளது.

ஆகவே சபாநாயகர் பிரச்சினை இப்போது வராது. அதுமட்டும் அல்ல கரு ஜெயசூரியவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க வாக்கெடுப்பு நடத்தவும் முடியாது. 

அவ்வாறு நடத்தினாலும் நாம் தோற்போம். எனவே பாராளுமன்ற அமர்வுகளை நிறைவு செய்யவே இப்போது தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

அடுத்து புதிய பாராளுமன்ற அமர்வுகளில் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும். எவ்வாறு இருப்பினும் டிசம்பர் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் கூடும் பாராளுமன்ற அமர்வுகளுடன் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.  மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும்.

அதன் பின்னர் பொதுத் தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்ற அமர்வுகள் கூட்டப்படும், அவ்வாறான நோக்கத்திலேயே அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46