ஜெனிவா பிரேரணையை நீக்குவதற்கு நடவடிக்கை - அரசாங்கம்

Published By: J.G.Stephan

27 Nov, 2019 | 12:39 PM
image

(ஆர்.யசி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அங்கீகரித்த பிரேரணையை மீண்டும் கலந்துரை யாடல்களுக்கு உட்படுத்தி பிரேரணைகளை  நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் கையாளவுள்ளது.  அடுத்த இருவாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதித்து விசாரணைகளை நடத்த  ஜனாதிபதி தயாரில்லை எனவும் அரசாங்கம்  குறிப்பிட்டுள்ளது.  

 முன்னைய அரசாங்கம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொண்ட விடயங்களை புதிய அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக  வெளிநட்டலுவல்கள் அமைச்சினை பொறுப்பேற்ற அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று முன்தினம் கருத்துக்களை முன்வைத்திருந்தார். இடைக்கால  அரசாங்கத்தின் கால எல்லைக்குள் இது குறித்து அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்ன என்று  அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிடம் வினவிய போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த காலத்தில், 2015 ஆம் ஆண்டில் அரசாங்கம் ஜெனிவாவில் முன்னெடுத்த நகர்வுகள் முற்றிலும் தவறானவையாகும். இது ஏற்றுகொள்ள முடியாதவை என நாம் தொடர்ச்சியாக  கூறி வந்துள்ளோம். போர்க்குற்றங்கள் நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லாது வெறுமனே ஒரு சிலர் கூறும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதை போலவே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடரின்  30/1 பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.

 இது இலங்கை அரசாங்கம் வழங்கியது என கூறுவதை விடவும் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட தீர்மானம் என்றே கூறமுடியும். அமைச்சரவை அங்கீகாரம் இல்லாது, பாராளுமன்றத்தில்  இது குறித்த அனுமதியை பெற்றுக்கொள்ளாது தாமாக இணை அனுசரணை பிரேரணையை ஆதரித்தனர்.

எனினும் நாம் மீண்டும் இதனை பரிசீலிக்கவுள்ளோம். வெகு விரைவில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன்  மீண்டும் கலந்துரையாடி இலங்கை அரசாங்கம் அங்கீகரித்த பிரேரணையை  கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தி அதனை நீக்குவதற்காக சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அத்துடன் சர்வதேச நீதிபதிகளின் தலையீடுகள் எதுவும் இலங்கையில் இல்லாத வகையில் இலங்கையின் இறைமையை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.  

அரசாங்கத்தின் இந்த நகர்வுகள் இலங்கையை அழுத்தங்களுக்கு உட்படுத்துமா அல்லது இவ்வாறான நகர்வுகள் சாத்தியமானதா என்பது குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் வினவியபோது  அவர் கூறியதாவது,

எமது அரசாங்கம் இந்த விடயத்தில் தீவிரமாக செயற்பட்டாக வேண்டும். ஏனெனில் கடந்த 2015 ஆம் ஆண்டு 30/1 பிரேரணையை மட்டும் அல்ல அதற்குப் பின்னரான காலங்களிலும் பல பிரேரணைகளை ஆதரித்து ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் மீண்டும் பிரேரணையை மாற்றுவது என்பது  கடினமான ஒன்றாகவே அமையும். ஆனால் அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் இதில் செயற்பட வேண்டும். இதுவரை காலமாக இலங்கை மீதான அழுத்தங்களை பிரயோகிக்கும் பிரேரணைகள் அனைத்தையும் நீக்க வேண்டும். அதுமட்டும் அல்ல சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் வரவழைத்து விசாரணைகளை நடத்தும் எந்த அனுமதியையும் ஜனாதிபதி வழங்க மாட்டார் என்பதை அவரே உறுதியாக கூறியுள்ளார்.  

எமது இராணுவத்தை தண்டிக்க எடுத்த நடவடிக்கைகள் எமது ஆட்சிக்காலத்தில் தடுக்கப்படும். அதுமட்டும் அல்லாது பிடிகளில் இருந்து எம்மை மீட்டுக்கொள்ளும் வகையில் புதிய நகர்வுகளை அரசாங்கம் கையாளும். அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இரு வாரங்களுக்குள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இது குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் எனவும் அவர் கூறினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41