நினைவுகூரும் உரிமையை எவரும் தடுப்பதற்கில்லை – அமைச்சர் டக்ளஸ் 

Published By: Daya

27 Nov, 2019 | 11:40 AM
image

எமது உரிமைப் போரிலும் அதன் பின்னரான அழிவு யுத்தத்திலும் இதுவரை போராளிகள் முதற்கொண்டு பொதுமக்கள் வரை எண்ணற்ற உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம்.

அதனால் எமது மக்களின் ஒவ்வொரு இல்லங்கள் தோறும் இழப்புகளின் துயரங்கள் இருந்து வருகின்றது. அந்தவகையில் உயிரிழந்தவர்களை நினைவேந்துவது ஒவ்வொரு சாதாரண குடி மக்களதும் ஆழ்மன விருப்பங்களாகும் என்பதுடன் அது அந்தக் குடிமக்களின் ஜனநாயக உரிமையுமாகும் எனக் கடற்றொழில் நீரியல் வள மூலதன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சக போராளிகளினதும் பொது மக்களினதும் உயிரிழப்புக்கள் நிகழ்ந்தபோது அதைவைத்து அரசியல் ஆதாயம் தேடலாம் என ஆனந்தக் கூத்தாடி மகிழ்ந்தவர்களே இன்று உறவுகளை நினைவேந்தும் நிகழ்வுகளில் கூடி நிற்கின்றார்கள். இவர்கள் குறித்த மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அமைதியானதும் சமாதானமானதுமான முறையில் மக்கள் அனுஷ்டிக்கும் நினைவேந்தலை துஷ்பிரயோகம் செய்து அதில் அரசியல் ஆதாயம் தேட அவர்கள் முற்படுவார்கள். இத்தகைய துஷ்பிரயோகங்களுக்கு எமது மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என நம்புகின்றோம்.

அரசியல் துஷ்பிரயோகங்கள் இன்றி உயிரிழந்தவர்களை  தமது ஆழ்மனங்களில் நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் எமது மக்களின் உரிமையை யாரும் தடுக்க மாட்டார்கள். மக்களின் உணர்வுகளுக்கும் ஆழ்மன விருப்பங்களுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் என்றும் மதிப்பளிப்போம்.

உயிரிழந்த  அனைத்து உயிர்களையும் நெஞ்சில் நினைவேந்தி அஞ்சலி மரியாதை செலுத்துகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04