கொழும்பு, கேகாலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த வைத்தியர்களால் இன்று காலை 8 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்த போராட்டத்தால் நோயாளர்கள் பெரும் துன்பத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

உள்ளக வைத்திய பயிற்சி பெற்ற வைத்தியர்களின் நியமணம், வைத்திய அதிகாரிகளின் இடமாற்ற பட்டியல், அரசியல் தலையீடு மற்றும் சுகாதாரதுறையின் தரம் குறைந்தமை ஆகியவற்றை எதிர்த்தும் சுகாதாரதுறையின் தரத்தினை பேணும் பொருட்டும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.