நாமலுக்கான பயணத்தடை பெப்ரவரி வரை நீக்கம்!

Published By: Vishnu

26 Nov, 2019 | 08:25 PM
image

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி தாக்கல் செய்த பிரேரணையை பரிசீலனை செய்த நீதிவான் பிரதீப் ஹெட்டியராச்சி இந்த அனுமதியை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் மூலம் 30 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்ஷ மற்றும் 5 பேருக்கு எதிராக மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49