தென்கொரியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜியத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பிரதிநிதிகளும் நேற்றிரவு தாயகம் திரும்பியுள்ளனர்.

ஹொங்கொங் இலிருந்து புறப்பட்ட பசுபிக் விமானச்சேவைக்கு சொந்தமான 611 என்னும் விமானத்தினூடாகவே இவர்கள் நேற்றிரவு 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தென் கொரியாவில் நடைபெறவிருந்த 107 வது ரொட்டரி சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதற்காகவே பிரதமர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரான  பான்கி மூன் ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் தென் கொரிய பிரதமரான ஹவாங் கியோ ஹ வையும் சந்தித்துள்ளார்.