அடுக்குமாடிக் கட்டடமொன்றிலிருந்து சிக்கிய 8 நாய்குட்டிகள் மீட்பு!

Published By: Vishnu

26 Nov, 2019 | 01:58 PM
image

அமெரிக்காவின் நாஷ்வில் உள்ள அடுக்குமாடிக் கட்டடமொன்றிலிருந்து தீயணைப்பு வீரர்கள் எட்டு நாயக்க் குட்டிகளை மீட்டெடுத்துள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி காலை நாஷ்வில் தீயணைப்புத் துறைக்குயினருக்கு அப் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்த ஒருவரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.

இதன்போது அழைப்பினை மேற்கொண்ட நபர் தனது வீட்டில் ஏதோ வித்தியசமான சத்தம் வருவதாக முறையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த கட்டடப் பகுதிக்கு சென்ற தீயணைப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே மேற்படி எட்டு நாய்க்குட்டிகளும் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளது. அவை பிறந்து ஆறு வாரம் மதிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ள தீயணைப்பு அதிகாரிகள் நாய் குட்டிகள் எவ்வாறு அங்கு வந்தது, எவ்வளவு காலம் அங்கிருந்தது என்பது தொடர்பில் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளானர்.

மீட்கப்பட்ட நாய்க்குட்டிகளின் தாயை கண்டறியும் வரை அவை தற்போது நாஷ்வில்லில் ரோபின் நெஸ்ட் வன விலங்கு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினரின் இந்த செயற்பாட்டுக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right