தேர்தலுக்கு பின்னரான காலத்தில் 42 முறைப்பாடுகள் – கஃபே

26 Nov, 2019 | 01:16 PM
image

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் இதுவரையான காலப்பகுதியில் 42 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னரான காலத்தில் காணப்பட்ட சட்டத்தை மதிக்கும் செயற்பாடு மற்றும் அமைதியான நிலை என்பன தேர்தலுக்கு பின்னர் முற்றிலும் மாறிவிட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார். 

தேர்தல் தினத்தன்று புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்காளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை,   யட்டியாந்தோட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் போன்ற சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், சட்டவிரோதமான முறையில் சில குழுவினர் ஆங்காங்கே கூடி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. அதன் பின்னர் ஒரு வார காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு, வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக அஹமட் மனாஸ் மக்கீன் மேலும் குறிப்பிட்டார்.

அத்தோடு அரசாங்கத்தால் பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகைகளை உடைத்தெறிந்தமை மற்றும் கழிவு எண்ணெய் வீசியமை போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக நோக்கும்போது கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தை விட இம்முறை மிகவும் குறைவான முறைப்பாடுகளே பதிவாகியுள்ளதென்றும் மிகவும் மோசமான சம்பவங்கள் ஏதும் பதவாகவில்லை என்றும் கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44