சத்யராஜ் சிபிராஜ் இணைந்து நடித்திருக்கும் ஹாரர் படம் ஜேக்சன் துரை. இந்த படத்தின் பாடல்கள் டீஸர் ஆகியவை வெளியாகி போதிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தை அடுத்த மாதம் ஜுன் மாதம் 17 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். இந்நிலையில் சுந்தர் சி 5 ஆண்டு இடைவெளிக்கு பின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் பொலிடிக்கல் சட்டயர் மற்றும் கொமடி படமான முத்துன கத்திரிக்கா படத்தின் வெளியீடும் அதே திகதியில் அமைந்திருக்கிறது. 

ஹாரர் படமும் கொமடி படமும் ஒரே திகதியில் வெளியாவதால் இணையத்தில் எந்த படத்தினை முதலில் பதிவிறக்கம் செய்வது என்று இணைய ரசிகர்கள் ஒரே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்களாம்.

தகவல்: சென்னை அலுவலகம்