"அமை­தி­யாக இருக்­கிறோம் சீண்டிப் பார்க்க வேண்டாம்": வடிவேல் சுரேஷ்

Published By: J.G.Stephan

26 Nov, 2019 | 12:03 PM
image

மலை­யக சமூ­கத்­தவ­ரா­கிய நாம் நாட்­டுக்­கா­கவும் அபி­வி­ருத்­திக்­கா­கவும் உச்­சக்­கட்ட பங்­க­ளிப்­பை வழங்கி வரு­கின்றோம். எமது மக்­களின் சக்தி மிகப்­பா­ரி­யது. எமது சமூகம் கொச்­சைப்­ப­டுத்­தப்­ப­டு­வதை வெறு­மனே பார்த்துக்கொண்­டி­ருக்­க ­மாட்டோம். நாம் அமை­தி­யாக இருக்­கிறோம் என்­ப­தற்­காக எவரும் சீண்­டிப்­பார்க்க முனைய வேண்டாம். ‘சாது மிரண்டால் காடு கொள்­ளாது’ என்­ப­தனை சக­லரும் புரிந்­து­கொள்­ளுங்கள். இல்­லையேல் விளை­வுகள் பார­தூ­ர­மாக அமையும் என்று பரா­ளு­மன்ற உறுப்­பினர் வடிவேல் சுரேஷ் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுகள் இந்­நாட்டு மக்­க­ளி­டையே இணக்­கப்­பா­டற்ற ஒரு சூழ்­நி­லைக்கு வித்­திட்­டி­ருக்­கின்­றன. சிறு­பான்­மை­யினர், பெரும்­பான்­மை­யினர் என்ற அடை­யா­ளங்கள் தெளி­வாக வெளித்­தெ­ரி­வ­தற்கு தேர்தல் முடி­வுகள் உந்துசக்­தி­யாகி இருக்­கின்­றன. தேர்­தலின் பின்னர் சிறு­பான்­மை­யினர் குறித்து பல்­வேறு  விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. சிறு­பான்­மை­யினர் ஓர­ணியில் நின்று வாக்­க­ளித்­தமை தொடர்­பிலும் கண்­ட­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. சில புல்­லு­ரு­விகள் இதனைச் சாட்­டாக வைத்துக் கொண்டு இம்­மக்­களைக் கூறு­ போடும் அல்­லது வேர­றுக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­வ­தையும் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

ஆனால் ஒரு விட­யத்தை நாம் நினைவில் கொள்­ள­ வேண்டும். ஜனா­தி­பதித் தேர்­த லில் பிர­தான கட்­சி­களில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்கள் இரு­வரும் சிங்­களப் பௌத்­தர்­களே. இவர்­களின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே எமது மக்கள் வாக்­க­ளித்­தனர். பொது மக்கள் இன­வாத ரீதியில் வாக்­க­ளிக்­க­வில்லை என்­பதே உண்­மை­யாகும். இதனை சக­லரும் விளங்­கிக் ­கொள்ள­ வேண்டும்.  மலை­யக மக்கள் இந்­நாட்டின் அபி­வி­ருத்­திக்கு தோள் கொடுப்­ப­வர்கள். இந்­நாட்டின் தேசிய வரு­மா­னத்தில் கணி­ச­மான வகி­பாகம் இம்­மக்­க­ளு­டை­ய­தாகும். இந்­நி­லையில்  அம்­மக்­களை கொச்­சைப்­ப­டுத்தும் வகையில் சிலர் கருத்­து­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

இம்­மக்கள் கல்­வியில் பின்­தங்­கி­ய­வர்கள் என்றும் திற­மை­யற்­ற­வர்கள் என்றும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. 'தோட்­டக்­காட்டான்' என்று தொழி­லா­ளர்­களை இழி­வு­ப­டுத்தி அர­சி­யல்­வாதி ஒருவர் கருத்­தை வெளிப்­ப­டுத்தி இருந்தார். இத்­த­கைய செயல்கள் வன்­மை­யாகக் கண்­டிக்­கத்­தக்­க­தாகும்.

மலை­யக மக்கள் இன்று பல்­வேறு வழி­க­ளிலும் முன்­னேறிச் சென்­றுள்­ளனர். பட்­ட­தா­ரிகள் பலர் மலை­ய­கத்தில் உள்­ளனர். அரச தொழில் துறை­களில் மலை­யக இளைஞர், யுவ­திகள் பலர் ஈடு­பட்­டுள்­ளனர். அபி­வி­ருத்­தி­ய­டைய வேண்டும் என்ற உற்­சாகம் மலை­ய­கத்­த­வர்­க­ளி­டையே காணப்­ப­டு­கின்­றது. இளை­ஞர்கள் விழிப்­ப­டைந்­தி­ருக்­கின்­றார்கள். இளைஞர் சக்தி மேலோங்கி வரு­கின்­றது. மலை­யக சமூகம் கல்வி மைய சமூ­க­மாக உரு­வெ­டுத்து வரு­வ­தாக பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­கரன் போன்­ற­வர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இந்­நி­லையில் மலை­யக மக்­களின் சம­கால வாழ்க்கை நிலை­மை­களை அறி­யா­த­வர்கள், மழைக்குக் கூட லயத்தில் ஒதுங்க வெட்­கப்­ப­டு­ப­வர்கள் மலை­யக மக்­களைக்  கொச்­சைப்­ப­டுத்தும் வகையில் கருத்­து­க்களை வெளி­யிட்டு வரு­கின்­றார்கள்.

இம்­மக்­களைப் பற்றி விமர்­சிப்­ப­தற்கு இவர்­க­ளுக்கு அரு­கதை இல்லை. சிறு­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்­களே மலை­யக மக்­களைக் கொச்­சைப்­ப­டுத்திப் பேசு­வது விந்­தை­யிலும் விந்­தை­யாகும். மலை­யக மக்­களை யாரும் கிள்­ளுக்­கீ­ரை­யாக நினைத்து விடக்­கூ­டாது. இம்­மக்­களின் சக்தி மிக­ மிக அதி­க­மாகும். இம்­மக்கள் அமை­தி­யாக இருக்­கின்­றார்கள் என்­ப­தற்­காக இவர்­களை எவரும் சீண்­டிப்­பார்க்க முனைதல் கூடாது. ‘சாது மிரண்டால் காடு கொள்­ளாது’ என்­ப­தனை சக­லரும் விளங்­கிக்­கொள்ள வேண்டும்.  மலை­யக சமூகம் தனது இருப்­பை உறு­திப்­ப­டுத்­திக்­கொண்டு இப்போது முன்னேறிச் செல்கின்றது.

சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய ஆளுமை இச்சமூகத்துக்கு இருக்கின்றது. அரசியல் வாதிகள் என்ற ரீதியில் நாங்களும் எங்களால் முடிந்த உச்சகட்ட பங்களிப்பை மலையக சமூக அபிவிருத்தி கருதி வழங்கி வருகின்றோம். எமது சமூகம் கொச்சைபடுத்தப்படுவதை நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். மலையக சமூகத்தின் ஒன்றி ணைந்த சக்தியைக்கொண்டு இவர்களுக்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01