ஆர்ச்சரிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய கேன் வில்லியம்சன்

Published By: Vishnu

26 Nov, 2019 | 11:55 AM
image

மவுங்கானுய் மவுண்டில் நடந்த சம்பவத்திற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரிடம் நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் மவுன்ட்மாங்கானுவில் நேற்று நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்த போட்டி முடிந்ததும் பெவிலியன் திரும்பிய இங்கிலாந்து அணிக்காக விளையாடும் மேற்கிந்தியத்தீவில் பிறந்த ஜோஃப்ரா ஆர்ச்சரை நோக்கி ரசிகர் ஒருவர் இனவெறியுடன் அவமரியாதையாக திட்டியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘எனது அணியை காப்பாற்ற பேட்டிங் செய்து போராடி விட்டு ஆட்டம் இழந்து வெளியேறுகையில் எனக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இனரீதியான விமர்சனத்தை எதிர்கொண்டேன். 

அந்த ஒருவரை தவிர ரசிகர்கள் அனைவரும் அருமையாக நடந்து கொண்டனர் என பதிவிட்டுள்ளார்.

இந் நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த நியூஸிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கேன் வில்லியம்சன்,

நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக நான் நியூஸிலாந்து சார்பாக முதலில் ஆர்ச்சரிடம் மன்னிப்புக் கோருகின்றேன். இது போன்ற சம்பவம் எதுவும் இனி மீண்டும் ஒருபோதும் நடைபெறாது என நான் நிச்சயமாக நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த குற்றத்தை செய்த ரசிகர் மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேறி விட்டதால் அவர் யார்? என்பதை பாதுகாவலர்களால் கண்டறிய முடியவில்லை. 

நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனம் மைதானத்தில் உள்ள கண்காணிப்பு கமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், ஆர்ச்சரிடம் மன்னிப்புக் கோருவதாகவும் நியூஸிலாந்து கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22