அதாவுல்லா மலையக மக்களை புண்படுத்தியுள்ளார் - ஆறுமுகன் தொண்டமான்

26 Nov, 2019 | 01:00 PM
image

மலையக மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் மோசமான வகையில் நடந்து கொண்ட முன்னாள் அமைச்சர் அதா வுல்லாவின் செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்றாகும். அதேவேளை அந்த சந்தரப்பத்தில் மலையக மக்களுக்காக குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் மனோகணேசன் நடந்துக் கொண்ட விதம் வரவேற்க தக்கது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.


ஒரு சமூகத்தின் உணர்வையும் அவர்களது கௌரவத்தையும் கொச்சைப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளையோ கருத்துகளையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.


நேற்று கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைச்துள்ள சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவதை எம்மால் அனுமதிக்க முடியாது. நாட்டை வளப்படுத்த அயராது பாடுபடும்தோட்ட துறையைச் சார்ந்தவர்களை தோட்டக்காட்டான் என்று அழைப்பதை எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் . இந்த வார்த்தை பிரயோகமானது மலையக மக்களின் மனதை பெரிதும் புண்படுத்தியுள்ளது.


இதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் எதிர்காலத்தில் நாவை அடக்கி பேசவேண்டுமென அதாவுல்லாவுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த நேர்காணலின் போது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் செயற்பட்ட விதத்தையும் பாராட்டி வரவேற்கிறேன் .


மலையகத்துக்கு பல்கலைக்கழகம்
மலையகத்துக்கென தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பது மலையக மக்களின் நீண்டகால கணவாகும்.இதனை நனவாக்கும் செயற்பட்டில் நாம் ஈடு பட்டுள்ளோம்.
மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து செயலறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி.  தேவராஜ் தலைமையில் குழுவொன்றை நேற்று திங்கட்கிழமை அமைத்துள்ளேன். இக்குழுவில் மலையகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளேன்.இக்குழுவினர் பல்கலைக்கழகம் அமைய வேண்டிய இடம் தேவையான வளங்கள் மற்றும் ஏளைய தேவைகள் குறித்து செயற்திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.
குறித்த அறிக்கை கிடைத்த பின்னர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , உணர்கல்வி அமைச்சர் பந்துல்ல குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன்  என்றார். 

(இரா.செல்வராஜா)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30