14 ஆயிரம் செம்­ம­றி­யா­டு­க­ளுடன் கவிழ்ந்த சரக்குக் கப்பல்

Published By: Digital Desk 3

26 Nov, 2019 | 12:01 PM
image

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவின் தென் கிழக்கு பகுதியில் கருங்கடலில் உள்ள மிடியா துறைமுகத்தில் இருந்து ‘தி குயின் ஹிந்த்’ என்ற சரக்கு கப்பல் புறப்பட்டு சிறிது நேரத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுகிழமை காலை கவிழ்ந்தது.

சவூதி அரேபியாவுக்கு 14 ஆயிரத்து 600  ஆடுகளை ஏற்றி சென்ற இந்த கப்பலில் சிரியாவை சேர்ந்த மாலுமிகள் 22 பேர் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென கப்பல் கருங்கடலில் கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்த மாலுமிகளுடன் அனைத்து ஆடுகளும் நீரில் மூழ்கின. இதையடுத்து, உள்ளூர் பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் ஆகியோரை கொண்ட கூட்டு மீட்பு குழு தீவிர மீட்பு பணியில் இறங்கியது.

மாலுமிகள் 22 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அருகிலுள்ள மற்றொரு கப்பலை சுற்றி நீந்திக்கொண்டிருந்த 32 ஆடுகளை மீட்பு குழுவினர் மீட்டனர்.

பெரும்பாலான ஆடுகள் கடலில் மூழ்கியிருக்கும் என்று கருதப்படுகிறது. எனினும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. 

கப்பல் கவிழ்ந்ததற்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை என்றும், ஆடுகளையும், கப்பலையும் மீட்கும் நடவடிக்கை முடிந்ததும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும், நேரடி விலங்கு ஏற்றுமதி வர்த்தகம் ஐரோப்பாவிற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஐரோப்பிய நேரடி விலங்கு ஏற்றுமதி 2000 ஆம் ஆண்டை விட 2018 உயர்ந்ததுள்ளது.

அண்மையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், சவுதி அரேபியா ருமேனியாவிலிருந்து நேரடி விலங்குகளை இறக்குமதி செய்யத் தொடங்கியது. இறைச்சிக்கான அதிகரித்துவரும் தேவை மற்றும் நீர் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்த வளர்ச்சி உந்தப்படுகிறது . குறிப்பாக கால்நடைகளை வளர்ப்பதற்கு  நீர் மிகவும் தேவை.

விலங்கு நலக் குழுக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் குறித்து பலமுறை கவலைகளை எழுப்பியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17