உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கி ஊசலாடிய விமானம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி

Published By: Daya

26 Nov, 2019 | 09:33 AM
image

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பறந்ததில் உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கிய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தை சேர்ந்தவர் 65 வயதான தோமஸ் காஸ்கோவிச் பைபெர் கப் எனும் தனது சிறிய வகை விமானத்தை நேற்று செலுத்திய போது, உள்ளூர் நேரப்படி சுமார் 4 மணியளவில் ஸ்காட் கவுண்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. 

இதையடுத்து தாறுமாறாக அங்குமிங்குமாக பறந்த விமானம் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பிகளில் சிக்கியது. இதையடுத்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 

‘அவரச எண்ணான 911 க்கு அழைப்பு வந்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். மின்னழுத்த கம்பிகளில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக விமானி எவ்வித காயமுமின்றி மீட்கப்பட்டார்’ என  பொலிஸார்  தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17