ராஜபக்ஷவினருக்குள் உருவாகும் தலைமைத்துவப் போட்டி

25 Nov, 2019 | 04:42 PM
image

ஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவு, இலங்­கையின் அர­சியல் நடை­மு­றை­களில் பெரி­ய­ள­வி­லான மாற்­றங்­க­ளுக்கு வித்­திடும் சூழல் ஒன்றை உரு­வாக்­கி­யுள்­ள­தாக  தெரி­கி­றது. இந்த தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக்ஷ பெற்­றி­ருக்­கின்ற வெற்­றி­யா­னது, சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தி­க­ளுக்குப் பெருந்­தீ­னி­யாக அமைந்­தி­ருக்­கி­றது இது முதல் விடயம். இந்த வெற்­றியைக் கொண்டு, ராஜபக் ஷவினர் நிரந்­த­ர­மான அர­சியல்  இருப்­புக்கு வழி­தேடத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர் என்­பது இரண்­டா­வது விடயம். இந்த இரண்டும் வெவ்­வே­றான விட­யங்­க­ளாக இருந்­தாலும், தனித்­த­னி­யாக இந்தப் பத்­தியில் ஆராய்­வது பொருத்தம்.


கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டதும், பொது பல­சேனா அமைப்பின் பொதுச்­செ­யலர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கொழும்பில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் வெளி­யிட்ட அறி­விப்பு முக்­கி­ய­மா­னது.


கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாகத்  தெரிவு செய்­யப்­பட்டு விட்­டதால், இனி பொது­பல சேனா அமைப்பு அவ­சி­ய­மற்­றது என்றும், அதனை  பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குப் பின்னர் கலைத்து விடப் போவ­தா­கவும் அவர் கூறி­யி­ருந்தார்.


அது­போ­லவே, கடந்த காலங்­களில் சர்ச்­சைக்­கு­ரிய பல நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட சிங்­கள ராவய அமைப்­பையும் கலைத்து விடப் போவ­தாக அதன் பொதுச்­செ­ய­லாளர் மாகல்­கந்தே சுதந்த தேரர் அறி­வித்­துள்ளார்.


அர­சர்­க­ளுக்கு பிறகு நாட்­டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்­துள்­ளதால், இனிமேல் தேசத்தைப் பாது­காக்க தேசிய அமைப்­புகள் தேவை­யில்லை எனவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.
அதா­வது கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாகி விட்­டதால், சிங்­கள பௌத்த தேசி­ய­வாத அமைப்­புகள் இனி தேவை­யில்லை என்ற முடி­வுக்கு இரண்டு பௌத்த கடும்­போக்­கு­வாத அமைப்­பு­களும் வந்­தி­ருக்­கின்­றன.


சிறுபான்­மை­யி­னரின் ஆத­ர­வின்றி அர­சாங்­கத்தை அமைக்க முடி­யாது என்ற நிலை மாற்­றப்­பட்டு விட்­ட­தா­கவும், ஞான­சார தேரர் குறிப்­பிட்­டி­ருந்தார்.
கடந்த ஐந்து ஆறு ஆண்­டு­களில் இலங்­கையில் பௌத்த கடும்­போக்­கு­வாத அமைப்­பு­க­ளாக அறி­யப்­பட்­டவை தான் பொது­பல சேனாவும், சிங்­கள ராவ­யவும்.
இது­போன்ற  இன்னும் பல அமைப்­புகள் தோற்றம் பெற்­றன, மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியின்  பிற்­கா­லத்தில்  தான். அப்­போது பாது­காப்புச் செய­ல­ராக இருந்­தவர் தற்­போ­தைய ஜனா­தி­ப­தி­யான கோத்­தா­பய ராஜபக்ஷ.


அவரே பொது பல­சேன அமைப்பை உரு­வாக்­கினார் என்ற குற்­றச்­சாட்­டு­களும் இருந்­தன. அதனை அவரும், மறுத்­தி­ருந்தார் பொது பல­சே­னாவும் மறுத்­தி­ருந்­தது.
பொது பல­சேனா, சிங்­கள ராவய போன்ற  பௌத்த அடிப்­ப­டை­வாத அமைப்­புகள், சிறு­பான்­மை­யி­ன­ரான முஸ்­லிம்கள் மீதும், கிறிஸ்­த­வர்கள் மீதும் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­துடன், தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக இன­வா­தத்­தையும் பரப்பி வந்­தன.


சிங்­கள பௌத்த நலனைப் பாது­காப்­பது என்ற போர்­வையில், ஏனைய இன, மதத்­தி­ன­ருக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.
கடந்த ஆட்­சிக்­கா­லத்­திலும் இந்த அமைப்­புகள் தெற்கில் உள்ள மக்கள் மத்­தியில் இன­வாதக் கருத்­துக்­களை விதைப்­ப­தற்கும், வன்­மு­றை­களை தூண்­டு­வ­தற்கும் கார­ண­மாக இருந்­தி­ருக்­கின்­றன.
இந்த அமைப்­புகள் இம்­முறை ஆட்சி மாற்­றத்­துக்கும் நிறை­யவே பங்­க­ளித்­தி­ருக்­கின்­றன. கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றிக்­காக வெளிப்­ப­டை­யா­கவும், உழைத்­தி­ருக்­கின்­றன.
இந்த நிலையில் தான், அவர் ஆட்­சிக்கு வந்­ததும், இனி தமது அமைப்­புகள் இயங்க வேண்­டிய அவ­சியம் இல்லை என்ற முடி­வுக்கு வந்­தி­ருப்­ப­தாக தெரி­கி­றது.
இதன் மூலம், வெளிப்­படும் செய்தி சிறு­பான்­மை­யி­ன­ருக்கு நம்­பிக்­கை­யூட்டக் கூடி­ய­தாக இல்லை என்­பதே உண்மை.


கடும் போக்கு பௌத்த சிங்­கள இன­வாத அமைப்­புகள் தமது நோக்­கங்­க­ளையும், அபி­லா­ஷை­க­ளையும்  நிறை­வேற்றும் ஒரு­வ­ராக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ செயற்­ப­டுவார் என்று நம்­பு­வதால் தான், தமது அமைப்­பு­களை கலைத்து விட முடிவு செய்­தி­ருக்­கின்­றன.
இதன் மூலம், நாட்­டுக்கும், புதிய ஜனா­தி­ப­திக்கும் அந்த அமைப்­புகள் கொண்டு செல்லும் செய்தி, பார­தூ­ர­மா­ன­வை­யா­கவே உள்­ளன.
குறித்த பேரி­ன­வாத அமைப்­பு­களின் வழியில்- அவற்றின் தேவையை நிறைவு செய்­ப­வ­ராக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ நடந்து கொள்ள முனைந்தால், அது சிறு­பான்­மை­யி­னரை அவ­ரி­டத்தில் இருந்து இன்னும் கூடு­த­லா­கவே அந்­நி­யப்­ப­டுத்தும்.


ஏற்­க­னவே அவர்கள் அவ­ரி­டத்தில் இருந்து வெகு­தூரம் விலகி இருக்­கின்­றனர்.
இவ்­வா­றான நிலையில் சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களின் பிரதிநிதி­யா­கவோ, அவர்­களின் எதிர்­பார்ப்­புக்­க­மைய ஆட்சி செய்யும் ஒரு­வ­ரா­கவோ கோத்­தா­பய ராஜபக் ஷ நடந்து கொள்­வா­ராயின், அது நாட்டில் இன­ரீ­தி­யான கொந்­த­ளிப்பை இன்னும் தீவி­ரப்­ப­டுத்தும்.
பொது பல­சேனா, சிங்­கள ராவய போன்ற அமைப்­புகள் கலைக்­கப்­ப­டு­வது என்­பது முக்­கி­ய­மான செய்தி அல்ல. அவற்றின் பிர­தி­நி­தி­யாக யார் தொடரப் போகிறார் என்­பது தான் முக்­கி­ய­மான விடயம்.
அதை­விட  இந்த அமைப்­புகள் ஒன்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்­கா­லத்தில் தொடங்­கப்­ப­ட­வில்லை. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் தான் உரு­வா­கின. அவர் மீது இந்த அமைப்­புகள் நம்­பிக்கை வைத்­தி­ருந்தால் இந்த அமைப்­புகள் உரு­வா­கி­யி­ருக்­காது.


அவரை விட, சிங்­கள பௌத்த பேரி­ன­வாத அமைப்­புகள் கோத்­தா­பய ராஜபக் ஷவை தமது இரட்­ச­க­ராக நம்பத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன என்­பது, இப்­போது முக்­கி­ய­மான ஒரு செய்தி. இது மஹிந்த ராஜபக் ஷவுக்கும், அவ­ரது வழி­வரும் வாரி­சு­க­ளுக்கும் கூட, நல்ல செய்­தி­யாக இருக்­காது.
தேர்­த­லுக்கு முன்னர், மஹிந்த ராஜபக் ஷ நாட்­டுக்கு இன்­னொரு தலைவர் தேவை­யில்லை  என்றும் சிறந்த நிர்­வாகி ஒரு­வரே தேவைப்­ப­டு­கிறார் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.


அதா­வது தலை­வ­ராக தான் இருக்­கிறேன் என்றும், தனக்குக் கீழ் பணி­யாற்றும் ஒரு நிர்­வா­கி­யா­கவே ஜனா­தி­பதி தேவைப்­ப­டு­கிறார் என்­பதுமே அவ­ரது கருத்­தாக இருந்­தது. ஆனால், சிங்­கள பௌத்­தர்­களின் ஏகோ­பித்த ஆத­ர­வுடன் ஜனா­தி­ப­தி­யா­கி­யுள்ள கோத்­தா­பய ராஜபக் ஷவை, மஹிந்­தவை விடவும் மேலான தலை­வ­னாக அடை­யா­ளப்­ப­டுத்த சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் முயற்­சிக்­கின்­றன. இந்த நிலையில், ராஜபக் ஷவி­ன­ருக்குள் எந்­த­ள­வுக்கு ஒத்­துப்­போகும் நிலை இருக்கும் என்­பதில் கேள்­விகள் உள்­ளன. இந்த கேள்­வி­களில் இருந்தே, அடுத்த விவ­கா­ரத்­துக்கு வருவோம். அதற்கும் இந்த கேள்­வி­க­ளுக்கும் தொடர்­புகள் உள்­ளன.


ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்றி பெற்­றதும், மஹிந்த ராஜபக் ஷ வெளி­யிட்ட முத­லா­வது அறிக்­கை­யி­லேயே, 19 ஆவது திருத்­தத்தை மாற்­றி­ய­மைப்­ப­தற்­கான சமிக்­ஞையை வெளி­யிட்­டி­ருந்தார்.


அதற்குப்  பிறகு, பசில் ராஜபக் ஷ இன்னும் விரி­வாக அது பற்றி தக­வல்­களை வெளி­யிட்டார்.
19 ஆவது திருத்­தச்­சட்டம் முற்­றாக ஒழிக்­கப்­பட வேண்டும் என்­பதே தமது நிலைப்­பாடு என்றும், அதில் ஒரு சில நல்ல விட­யங்கள் இருந்­தாலும், ஏனை­யவை மோச­மான விட­யங்கள் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.


ராஜபக் ஷவி­னரின் பார்­வையில் 19 ஆவது திருத்­தச்­சட்டம் ஒரு மோச­மான அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பாடு தான் என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை. ஏனென்றால் அது அவர்­களின் குடும்­பத்­தி­னரின் நலன்­க­ளுக்கு நேர­டி­யான பாதிப்பை ஏற்­ப­டுத்­திய ஒன்று.


மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாத நிலையை ஏற்­ப­டுத்­தி­யது அந்த திருத்தம் தான். அவ­ருக்குப் பதி­லாக அவ­ரது மகன் நாமல் ராஜபக் ஷவை போட்­டியில் நிறுத்த முடி­யாமல் தடுத்­ததும் 19 ஆவது திருத்தம் தான். பசில் ராஜபக் ஷவை அர­சாங்­கத்­துக்குள் உள்­நு­ழைய முடி­யாத படி தடை போட்­டி­ருப்­பதும் இந்த திருத்தச் சட்டம் தான்.


இவை தவிர, தற்­போது ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜபக் ஷ வந்­தி­ருந்­தாலும், தாம் நினைத்­த­வாறு அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்த முடி­யாமல் தடுத்து வைத்­தி­ருப்­பதும் 19 ஆவது திருத்­தச்­சட்டம் தான்.
எனவே 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மீது அவர்­களின் குறி விழுந்­தி­ருப்­பது ஆச்­ச­ரி­யப்­படும் ஒரு விட­ய­மன்று.


ஆனால் நாட்­டுக்கு பல நல்ல விட­யங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது இந்த 19 ஆவது திருத்­தச்­சட்டம் தான் என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை. ஜனா­தி­ப­தியின்  நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டன, பாரா­ளு­மன்­றத்தின்  அதி­காரம்  வலுப்­ப­டுத்­தப்­பட்­டது.  சுதந்­தி­ர­மான ஆணைக்­கு­ழுக்கள்- குறிப்­பாக தேர்தல் ஆணைக்­குழு, நீதிச்­சேவை ஆணைக்­குழு  என்­பன  நிறு­வப்­பட்­டமை என்­பன முக்­கி­ய­மான மாற்­றங்கள்.


சுதந்­தி­ர­மான ஆணைக்­கு­ழுக்கள்  தான் ஜன­நா­யக ரீதி­யான தேர்­தலை உறு­திப்­ப­டுத்­தின. நீதித்­து­றையில் ஓர­ள­வுக்­கா­வது சுதந்­தி­ரத்தை உறுதி செய்­துள்­ளன.
ஆனாலும், 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை நீக்க வேண்டும் என்­பதில் மஹிந்த- பசில் தரப்­புகள் தீவி­ர­மாக இருக்­கின்­றன என்றால், அதற்கு ஒரு காரணம், ராஜபக் ஷ குடும்­பத்தின் ஆதிக்கம் இன்னும் ஆழ­மாக காலூன்­று­வ­தற்கு அது தடை­யாக இருப்­பது தான்.


கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றி­யா­னது மஹிந்த ராஜபக் ஷவி­னதும் அவ­ரது வாரி­சு­க­ளி­னதும் அர­சியல் எதிர்­கா­லத்­துக்கு சவா­லா­னது. ஏனென்றால் சிங்­கள மக்­களின் ஏகோ­பித்த ஆத­ரவு பெற்ற தலை­வ­ராக அவர் மாறி­யி­ருக்­கிறார்.


இது மஹிந்த ராஜபக் ஷவை கண்­டு­கொள்­ளாத நிலைக்கு, அவரை மேவிக் கொண்டு எழுச்சி பெறும் நிலைக்கு இட்டுச் சென்று விடக் கூடும்.


அதை­விட, 19 ஆவது திருத்­த­மா­னது, ஜனா­தி­பதி, பிர­தமர் பத­வி­களை வைத்­தி­ருப்­ப­வர்­க­ளுக்­கி­டையில் அதி­கார மோதல்­களை ஏற்­ப­டுத்தக் கூடி­யது என்ற கருத்தும் அர­சி­ய­லா­ளர்கள்  மத்தியில் உள்ளது.
இது உறவு முறை அண்ணன் – தம்பியாக இருந்தாலும், சிக்கலை ஏற்படுத்தி விடக் கூடும்.
இவ்வாறான நிலையில், மஹிந்த- பசில் தரப்பு 19 ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதில் ஆர்வம் காட்டுவதில் ஆச்சரியமில்லை. அவர்கள் இதனை தேர்தலுக்கு முன்னரே கூறியிருந்தனர்.
ஆனாலும் அதில் விரைவாகச் செயற்பட முனைவதும், நாமல் ராஜபக் ஷவுக்கு மஹிந்த ராஜபக் ஷ கூடுதல் முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்திருப்பதும் கவனிக்கத்தக்க விடயங்கள்.


இந்தியப் பயணத்தின் போது நாமலை அழைத்துச் சென்று புதுடெல்லி தலைவர்களுக்கு அறிமுகப்படுத்திய மஹிந்த ராஜபக் ஷ, அதற்குப் பின்னர் கடந்தவாரம் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் வந்து சந்தித்த போதும், நாமல் ராஜபக் ஷவை தன்னுடன் வைத்திருந்தார்.


இது மஹிந்த ராஜபக் ஷ தனதும் தனது வாரிசுகளினதும் அரசியலில் மிக கவனமாக இருக்கிறார் என்பதை புலப்படுத்துகிறது.
இவ்வாறான நிலையில், சிங்கள பௌத்தர்களின் தலைமைத்துவத்துக்கான போட்டி வெளியே இருந்து வரப்போவதில்ல, என்றே தெரிகிறது.

-சத்ரியன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04