"எல்லா இன, மதத்தைச் சேர்ந்­த­வர்­களுக்கும் நானே ஜனா­தி­பதி": அச்சம் களையப்படுமா.. ?

Published By: J.G.Stephan

25 Nov, 2019 | 04:42 PM
image

“இப்­போது தேர்­தல்கள் முடிந்­து ­விட்டன. நான் இப்­பொ­ழுது அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்­கு­மான ஜனாதிபதி.  எனக்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளுக்கும் வாக்களிக்­கா­த­வர்­க­ளுக்கும் - அவர்கள் எந்த இனத்தை அல்­லது எந்த மதத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்தாலும்- நான் ஜனா­தி­பதி.

இப்­போது எனக்குத் தேவை­யா­னது எல்லாம் - அனை­வரும் மதிப்­பு­டனும் கௌர­வத்­து­டனும் வாழக்­கூ­டிய - சுபீட்­ச­மா­னதும் அமை­தி­யா­ன­து­மான ஒரு நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான உங்கள் ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய ஆத­ரவும் மட்டுமே.”

இவ்­வாறு நாட்டு மக்­க­ளுக்கு ஒரு அறிவித்­தலை தனது முகநூல் பக்­கத்தில் வெளி­யிட்­டி­ருந்தார் புதிய ஜனாதி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ. கடும்­போக்­காளர் என்று கடந்த காலங்­களில் சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருந்த இவர் ஜனா­தி­ப­தி­யா­ன­வுடன் இவ்­வாறு மென்­போக்கு சுபா­வத்­துடன் ஒரு கருத்தை வெளி­யிட்­டி­ருப்­ப­தா­னது கடந்த கால சம்­ப­வங்­களின் கசப்­பான அனு­ப­வங்­களின் பிர­தி­ப­லிப்­பே­யன்றி வேறொன்­று­மில்லை.

தென்­னி­லங்கை பெரும்­பான்மை மக்­களால் ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜ­பக்ஷ தெரிவு செய்­யப்­பட்­ட­வுடன் உரு­வான வெற்றிக் கொண்­டாட்­டங்­களை சிறு­பான்­மை­யின மக்கள் ஒரு வித அச்­சத்­து­ட­னேயே பார்க்கத் தலைப்­பட்­டனர். தாமும் இந்த நாட்டின் ஒரு பெரும்­பான்­மை­யின வேட்­பா­ள­ருக்கே வாக்­க­ளித்தோம் என்ற உணர்வு அத்­த­ரு­ணத்தில் அவர்­க­ளிடம் ஏற்­ப­ட­வில்லை. இதற்குக் காரணம் 2009 ஆம் ஆண்டு போர் முடி­வுக்கு வந்த நாளன்று மேற்­கொள்­ளப்­பட்ட வெற்றிக் கொண்­டாட்­டங்களை அது ஒத்­தி­ருந்­தது.

எனினும் தனது வெற்­றிக்­குப்­பி­றகு மிகவும் அவ­தா­ன­மா­கவும் அலட்டிக் ­கொள்­ளா­மலும் தனது நகர்வை மேற்­கொண்டார் ஜனா­தி­பதி. இதே வேளை சமூக ஊட­கங்­களில் தேர்தல் வெற்­றியை இன­வாத நோக்­கோடு பரப்பும் செயற்­பா­டு­களும் தாரா­ள­மாக இடம்­பெற்­றன. அதற்கு பதி­லடி கொடுக்கும் வித­மாக சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களும் இன­வாத கருத்­துக்­களை பதி­விட்டு வந்­தனர். இதில் போலி செய்­தி­களே பிர­தான இடத்தைப் பிடித்­தன.

தேசிய கீதத்தை இனி தமிழில் பாட முடி­யாது, யாழ் மிரு­சுவில் 8 தமி­ழர்கள் கொலை வழக்கு மரண தண்­டனை கைதி மேஜர் சுனில் ரத்நாயக்க விடுதலை, தகவல் பரி­மாற்றச் சட்டம் அமுல், அர­சாங்­கத்­துக்கு எதி­ராக எவரும் கருத்­துக்கள் கூற முடி­யாது என பல­வா­றான போலிச் செய்­திகள் முக­நூலில் உலா­வின.  இதை மேலும் தீவி­ரப்­ப­டுத்­து­வ­தற்கு அதை பலரும் ஏனையோருக்கு பகிர்ந்­தனர்.

இது ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் அடுத்த கட்ட நகர்­வு­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என பேசப்­பட்­டது. ஏனெனில் சமூக ஊட­கங்­களின் தீவி­ரத்­தன்மை கடந்த அர­சாங்­கத்­திலும் எதி­ரொ­லித்­ததன் பய­னா­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால அதை சில வாரங்­க­ளுக்கு முடக்­கினார். எனினும் தேர்தல் வெற்­றிக்­குப்­பின்னர்  மீண்டும் அச்­செ­யற்­பாடு தொடரும் என்று பேசப்­பட்­டாலும் கூட அதை தனது ஒரு அறி­வித்தல் மூலம் நிறுத்­தினார் ஜனா­தி­பதி கோத்தா. எந்த சமூக ஊட­கப்­பக்­கங்­களில் புதிய அர­சாங்கம் பற்­றிய நேர்­மறை விமர்­ச­னங்கள் வந்­ததோ அதே சமூக ஊட­கத்தில் தனது பக்­கத்தில் தனது கொடி­யுடன் ஒரு அறி­வித்­தலை அவர் வெளி­யிட்டார்.

‘தற்­போது சமூக ஊட­கங்­களில் என்னால் அறி­விக்­கப்­பட்ட ‘அரச தீர்­மா­னங்கள் என்ற பெயரில் பல தவ­றான செய்­திகள் பகி­ரப்­பட்டு வரு­கின்­றன.

எனது எந்­த­வொரு முடிவு தொடர்­பான அறி­விப்பும் ஜனா­தி­பதி செய­ல­கத்தின் முத்­திரை பொறிக்­கப்­பட்டு ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரி­வினால் அல்­லது எனது அதி­கா­ர­பூர்வ சமூக வலைத்­த­ளங்­களின் ஊடாக மட்­டுமே அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும் என்­பதை தயவு செய்து நினைவில் கொள்­ளுங்கள்.

இவ்­வாறு மும்­மொ­ழி­க­ளிலும் ஒரு அறி­விப்பை செய்து தேவை­யற்ற போலிச் செய்­தி­க­ளுக்கு ஒரு முற்­றுப்­புள்ளி வைத்தார் ஜனா­தி­பதி. இது பல­ராலும் வர­வேற்­கப்­பட்­டி­ருந்­தது. ஏனெனில் இவ்­வா­றான செய்­திகள் பர­வினால் முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்­கு­களை முடக்கி வைப்­பதே கடந்த அர­சாங்­கத்தின்  வேலை­யாக இருந்­தது.  

 
சிறைச்­சாலை திணைக்­க­ளத்தின் மறுப்பு
இதேவேளை, யாழ் மிரு­சுவில் படு­கொலை வழக்கில் தண்­டனை அனு­ப­வித்து வரும் முன்னாள் இரா­ணுவ வீரர் சுனில் ரத்­­நா­யக்க ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பில் விடு­தலை செய்­யப்­ப­ட­வில்லை இது ஒரு போலி­யான செய்தி என சிறைச்­சா­லைகள் திணைக்­களம் உட­ன­டி­யாக மறுப்புத் தெரி­வித்­தி­ருந்­தது. மேற்­படி திணைக்­க­ளத்தின் நிர்­வா­கப்­பி­ரிவு ஆணை­யாளர் கே.டி.பந்­துல ஜெய­சிங்க இதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். 

மேலும் தமிழில் தேசிய கீதத்தை இனி பாடத்  தடை என்ற செய்­தியும் தவ­றா­னது என  தன்­னிடம்  வாசு­தேவ நாண­யக்­கார எம். பி தெரி­வித்­த­தாக அரச கரும மொழிகள் நல்­லி­ணக்க முன்னாள் அமைச்சர் மனோ கணேசன்  தனது முகநூல் பக்­கத்தில் பகிர்ந்­தி­ருந்தார். 

இது இவ்­வா­றி­ருக்க புதிய அர­சாங்­கத்தின் மீது சேறு பூசும் வகை­யிலும் இனங்­க­ளுக்­கி­டையில் வன்­மு­றையை தூண்டும் வண்­ணமும் குரோ­தப்­பேச்­சுக்கள் மற்றும் வெறுக்­கத்­தக்க கருத்­துக்­களை உரு­வாக்­கு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் மேஜர் ஜெனரல் கமால் குண­ரட்ன தெரி­வித்­தி­ருக்­கிறார்.

எந்­த­வொரு அர­சியல் பழி­வாங்­கல்கள், கடத்­தல்கள், குழப்பம் விளை­வித்தல் தொடர்­பாக பீதி­யெ­துவும் இருக்கக் கூடா­தென்றும் அவ்­வாறு எவர் நடந்து கொண்­டாலும் அவர்­களின் அந்­தஸ்து பாராது சட்­டத்தை அமுல்­ப­டுத்த பாது­காப்புப் பிரி­வி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

மேற்­கு­றித்த நகர்­வுகள் கார­ண­மாக தற்­போது சமூக வலைத்­த­ளங்­களில் அவ்வா­றான  கருத்­துக்கள் குறைவடைந்துள்­ளன அல்­லது முற்­றாக தவிர்க்­கப்­பட்­டுள்­ளன எனலாம். இதே வேளை எட்­டி­யாந்­தோட்டை பகு­தியில் இடம்­பெற்ற தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் சம்­பவம் நாட்டில் ஏனைய சிறு­பான்­மை­யினர் வாழ்ந்து வரும் பிர­தே­சங்­க­ளிலும் அச்ச நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. எனினும் புதிய அர­சாங்­கத்தின் உட­னடி செயற்­பா­டு­களால் குறிப்­பிட்ட சம்­ப­வத்தின் சூத்­தி­ர­தா­ரிகள் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட்­டனர்.  அதை விட எட்­டி­யாந்­தோட்டை பிர­தே­சத்தைத் தவிர்த்­துப்­பார்த்தால் , தேர்தல் வெற்­றி­யை­ய­டுத்து சிறு­பான்­மை­யினர்  செறி­வாக வாழ்ந்து வரும் பகு­தி­களில் அவர்­க­ளுக்­கெ­தி­ராக எந்­த­வித  அசம்­பா­வித சம்­ப­வங்­களும் இடம்­பெ­ற­வில்லை எனும் போது புதிய அர­சாங்­கத்தின் பாது­காப்பு கட்­ட­மைப்பு வெகு விரை­வாக எந்­த­ள­வுக்கு சீர்­செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை உண­ரலாம். இதற்கு சிறந்த உதா­ர­ண­மாக மற்­று­மொரு சம்பவத்தையும் கூறலாம்.


ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ கட­மை­யேற்பு

17 ஆம் திகதி அநு­ரா­த­பு­ரத்தில்  ஜனா­தி­ப­தி­யாக பதவிப் பிர­மாணம் செய்து கொண்ட ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ  மறுநாள் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தனது கட­மையை பொறுப்­பேற்றார். அச்­சந்­தர்ப்­பத்தில் முப்­ப­டை­யி­னரின் அணி­வ­குப்பு மரி­யாதை நிகழ்வு இடம்­பெற்­ற­தோடு 21 துப்­பாக்கி வேட்­டுக்கள் முழங்க அவர் ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு அழைத்­துச்­செல்­லப்­பட்டார். 

ஆச்­ச­ரியம் ஏற்­ப­டுத்தும் வகையில்  காலி வீதி எக்­கா­ர­ணங்கள் கொண்டும் மூடப்­ப­ட­வில்லை. வழ­மை­யான போக்­கு ­வரத்து இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது. இது நாட்டின் பாது­காப்பு தொடர்பில் மக்கள் மத்­தியில் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­திய சம்­ப­வ­மாக இருந்­தது. எனினும் இது குறித்து எந்த ஊட­கங்­களும் செய்­தி­யாக்க ஆர்வம் காட்­ட­வில்லை.  தனது வாகனம் செல்லும் போது எந்த வீதியும் மூடப்­ப­டக்­கூ­டாது என்றும் அதேவேளை  தனது வாக­னத்­தொ­ட­ர­ணியில் பாது­காப்பு வாக­னங்கள் மூன்றுக்கு மேல் செல்­லக்­கூ­டாது என்றும் அவர் உத்­த­ர­விட்­டுள்­ள­தாகத் தெரி­கின்­றது.

நம்­பிக்கை தரும் அறி­விப்­புகள்
இவ்­வாறு தான் பத­வி­யேற்­ற­வுடன் ஏற்­க­னவே திட்­ட­மிட்டு அல்­லது தீர்­மா­னிக்­கப்­பட்ட பல விட­யங்­களை ஜனா­தி­பதி  கோத்­தா­பய அமுல்­ப­டுத்­தி­யுள்ளார். அதேவேளை நாட்டின் அபி­வி­ருத்தி தொடர்பில் அமைச்­சர்கள் அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்­டிய நிலை­மையும் இங்கு உரு­வா­கி­யுள்­ளது.

வீண் விரயம் மற்றும் ஊழல் மோசடி தனது ஆட்­சியில் என்றும் இருக்­காது என தனது பதவிப் பிர­மாண உரையில் அழுத்­த­மாக கூறி­யி­ருந்த ஜனாதிபதி சிறுபான்மை மக்கள் தனக்கு வாக்களிக்கா விட்டாலும் அவர்களை அரவணைத்து செல்ல தான் தயாராக இருப்பதாகவும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.

தேர்தலுக்கு முன்பே ‘என்னை கண்டு அச்சப்படாதீர்கள்’ என  அவர் சிறுபான்மை மக்களின் ஆதரவை கோரியிருந்தார். தற்போது அதை செயற்படுத்தும் வகையில் பல விடயங்களை முன்னெடுப்பதற்கு அவர் தயாராகி விட்டார் என்றே தெரிகிறது.

எனினும் இனப்பிரச்சினை விடயத்தில் உடனடி தீர்வு காண முடியாவிட்டாலும் கூட சிறுபான்மையினர் ஆறுதலடையும் வகையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இராணுவத்தினர் வசமுள்ள  மேலதிக காணிகளை விடுவித்தல் , தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்தல் போன்ற விடயங்களை அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னராக ஓரளவேனும் முன்னெடுத்தால் சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் அதே வேளை அவர்கள் மத்தியில் தோன்றியுள்ள அச்சமும் களையப்படும் என்பது திண்ணம்.

- சிவலிங்கம் சிவகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22