சுகாதாரத் தொழிலாளிக்கு கத்தியை காண்பித்த மீன் வியாபாரி கைது

Published By: Digital Desk 4

25 Nov, 2019 | 10:44 AM
image

சுன்னாகம் மீன் சந்தையில் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத் தொழிலாளியை வெட்டுக் கத்தியை காண்பித்து மிரட்டியதாக தெரிவித்து மீன் வியாபாரி ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் இடம்பெற்றது.

சுன்னாகம் மீன் சந்தையில் கழிவகற்றல் பணியில் சுகாதாரத் தொழிலாளி ஈடுபட்டுள்ளார். இதன்போது வியாபாரி ஒருவர் கழிவகற்றல் ஒழுங்காக நடைபெறுவதில்லை என்று தொழிலாளியிடம் கேட்டுள்ளார்.

அதனால் இருவருக்கும் இடையே இடம்பெற்ற முறுகல் நிலையையடுத்து தொழிலாளிகள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவத்தை அறிந்த வலி.தெற்கு பிரதேச சபைத் தவிசாளர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றார். அங்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

சுன்னாகம் மீன் சந்தைக்குச் சென்ற பொலிஸார், வியாபாரியை கைது செய்து இழுத்துச் சென்றனர் என்று சந்தையில் கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து சுகாதாரத் தொழிலாளிகள் கடமையை இடைநிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

“சுன்னாகம் மீன் சந்தையில் ஒழுங்குமுறையில் கழிவகற்றல் இடம்பெறுவதில்லை. பணியை ஒழுங்காகச் செய்யலாமே என்று கேட்டேன். அப்போது எனது கையில் மீன்வெட்டும் கத்தி இருந்தது. அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் ஒழுங்கான கழிவகற்றலை உறுதி செய்யவில்லை” என்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மீன் வியாபாரி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44