அமைச்சர் - சங்கத்திற்கு இடையிலான மோதல் : ஜனாதிபதிக்கு சங்கத்தால் அவசர கடிதம்.!

Published By: Robert

30 May, 2016 | 04:48 PM
image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதமொன்றை இன்று அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில், உடனடியாக ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமெனவும் தொழிற்சங்கங்களில் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய வேண்டுமெனவும் சுகாதார அமைச்சானது அவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமெனவும் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

மேலும், குறித்த கடிதத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளதாவது, 

சுகாதார அமைச்சரின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு எதிரான கொள்கையினால் தற்போது தாங்கள் பல நெருக்கடிகளுக்கு முங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அமைச்சானது மிகவும் சிறப்பாக செயற்பட்டது.

ஆனால் தற்போதைய அமைச்சரின் தனிப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக சுகாதார அமைச்சு சீர்குலைந்து போயுள்ளது.

குறித்த அமைச்சானது மேலும் முறிவடைந்து விழும் முன் அதனை பாதுகாக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதே சமயம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன் என சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கமானது வேலை நிறுத்தமொன்றை மேற்கொள்ள ஆயத்தங்களை நடத்தி வருகின்றது.

அத்துடன் வைத்தியசாலை வேலை வாய்ப்பு நியமனங்கள் வழங்கப்படுவது உரிய வழிமுறைகளின் அடிப்படையிலேயே இதனை யாராளும் மாற்ற முடியாது.

வைத்தியசாலையின் வேலை நியமனங்கள் வழங்கப்படுவது தொடர்பில் தீர்மானிக்க வேண்டியது அரச வைத்திய அதிகாரிகள் சங்கமல்ல.

வேலை நிறுத்தத்தின் மூலம் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவதை ஒத்துக்கொள்ள முடியாததுடன் அவர்களுக்கு கிடைக்கப்பெறாத சுகாதார சேவை எங்களுக்கும் தேவையில்லையென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30