ஹொங்கொங் தேர்தலில் ஜனநாயக ஆதரவு குழுக்கள் பெரும் வெற்றி

25 Nov, 2019 | 08:14 AM
image

ஹொங்கொங்கில் இடம்பெற்ற மாவட்ட சபை தேர்தல்களில் ஜனநாயக ஆதரவு இயக்கம் எதிர்பாராத பாரிய வெற்றியை பெற்றுள்ளது.

ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் வேட்பாளர்கள் இதுவரையில் 278 ஆசனங்களை கைப்பற்றியுள்;ளனர்.

சீனா சார்பு வேட்பாளர்கள் 42 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர்.

இந்த தேர்தலில் சீனாசார்பு தரப்பின் முக்கிய வேட்பாளரான  யூனிஸ் கோ தோல்வியடைந்துள்ளார்.

இந்த வேட்பாளர்  ஹொங்கொங்  காவல்துறையினருக்கு ஆதரவாக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார்,மேலும் இவர் ஜனநாயகம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்கிய கும்பல்களுடன் தொடர்பை பேணி வந்துள்ளார்.

இந்த நிலையிலேயே இவர் சில வாரங்களிற்கு முன்னர் கத்திக்குத்துக்கு இலக்கானார், இந்த தேர்தல் முடிவினை சீனா சார்பு வேட்பாளர் வானம் தலைகீழாக மாறியது போன்றது என வர்ணித்துள்ளார்.

இதேவேளை ஹொங்கொங்கில் பாரிய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து வரும் அமைப்பின் தலைவரான ஜிம்மி சாம் இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்த தேர்தல் முக்கியமானது ஏனெனில் இதுவே  ஆட்சியாளர்களிற்கும் ஜனநாயக ஆதரவு கட்சிகளிற்கும் இடையிலான முறைப்படியான மோதல் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்  ஜொசுவா வொங் இந்த தேர்தலில் nவைவற்றிபெற்றுள்ளார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என அவர் வர்ணித்துள்ளார்.

ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த தேர்தல் ஆட்சியாளர்களிற்கான ஆதரவிற்கான பரிசோதனை களம் என வர்ணிக்கப்பட்ட நிலையிலேயே முடிவுகள் ஜனநாயகம் கோரிடும் போராடும் இயக்கங்களிற்கு சாதகமாக அமைந்துள்ளன.

ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளாமலிருந்த பெரும்பான்மையானவர்கள் தங்களிற்கு ஆதரவளிப்பார்கள் என ஆட்சியாளர்கள் கருதினர் .

எனினும் அது சாத்தியமாகவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10