நாட்டை அதிர வைத்த குற்றங்கள் தொடர்பில் துப்புத் துலக்கிய சி.ஐ.டி. சிறப்பு விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறினார்

Published By: Vishnu

24 Nov, 2019 | 07:28 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எனப்படும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணை அறையின் பொறுப்பதிகாரியும், நாட்டை அதிர வைத்த பல முக்கிய குற்றங்கள் குறித்து துப்புத் துலக்கி சந்தேக நபர்களைக் கைது செய்தவருமான  சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.  

தான் முன்னெடுத்த விசாரணைகள் தொடர்பில் மேற்பார்வை செய்த தனது மேலதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட செயலராக இடமாற்றப்பட்டதை அடுத்தும், புதிய அரசாங்க மாற்றத்தின் பின்னரும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வந்த அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக அவர் இவ்வாறு நாட்டை விட்டு அடைக்களம் தேடி சுவிட்சர்லாந்து நோக்கி நிசாந்த சில்வா சென்றுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச  விமான நிலையத்தில் இருந்து இன்று நண்பகல், 12.50 மணிக்கு சுவிட்சர்லாந்தை நோக்கி அவரும் அவரது மனைவி, மூன்று மகள்மாரும்  நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல், த நேஷன் பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்தமை, ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் பல தொடர்பிலான விசாரணைகள் சி.ஐ.டி.யின் சிறப்பு விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வவா தலைமையிலான குழுவினராலேயே முன்னெடுக்கப்ப்ட்டிருந்தது. 

அத்துடன் கடற்படை புலனாய்வு பிரிவு தொடர்புபட்ட கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து 5 மாணவர் உள்ளிட்ட 11 பேரைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கீயமை தொடர்பிலான விசாரணைகள் அவர் முன்னெடுத்த மிக முக்கியமான விசாரணை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21