33 வேட்பாளர்களின் சார்பில் செலுத்தப்பட்ட கட்டுப்பணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சொந்தம் : தேர்தல்கள் ஆணைக்குழு 

Published By: R. Kalaichelvan

24 Nov, 2019 | 06:44 PM
image

(ஆர்.யசி)

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களின் பிரதான இருவர் தவிர்ந்து ஏனைய 33 வேட்பாளர்களிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாய்களை தேர்தல்கள் ஆணைக்குழு பறிமுதல் செய்துள்ளது.

 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர் தலா 50 ஆயிரம் ரூபாயும், சுயேச்சை வேட்பாளர் தலா 75 ஆயிரம் ரூபாயும் கட்டுப்பணம் செலுத்த வேண்டும்  என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது. 

அதேபோல் ஜனாதிபதி  வேட்பாளர்கள் தேர்தலில் 12.5 வீத வாக்குகளுக்கு மேல் பெற்றால் கட்டுப்பணம் மீளவும் உரிய நபர்களுக்கு செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகிய இருவர் மட்டுமே 12.5 வீதத்தை தாண்டிய வாக்குகளை பெற்றுக்கொண்டனர். 

ஆகவே அவர்கள் இருவர் தவிர்ந்து ஏனைய 33 வேட்பாளர்களின் சார்பில் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் ரூபாயும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே சொந்தமாகியுள்ளது. 

இதில் பிரதான மூவர்களின் ஒருவராக கருதப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயகவும் 3.16 வீத வாக்குகளையே பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51