அபாயத்தின் விளிம்பில் வாழும் மஸ்கெலியா கல்கந்தை தோட்டத்தின் 47 குடும்பங்கள்

Published By: Digital Desk 4

24 Nov, 2019 | 06:23 PM
image

மண்சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ள மஸ்கெலியா காட்மோர் கல்கந்தை தோட்ட மக்களுக்கு ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் வீடுகள் அமைத்து கொடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த தோட்டத்தில் ஒரு உயர்ந்த மலை பகுதியின் கீழ் அமைக்கப்பட்ட இரண்டு தொடர் லயன் குடியிருப்பில் 47 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக குறிப்பாக குடியிருப்புக்கு மேலுள்ள மண் மேட்டில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு கற்பாறைகள் உருண்டு குடியிருப்புகளுக்கு சேதம் விளைவித்ததையடுத்து அந்த 47 குடும்பங்களை சேர்ந்த 204 பேர் காட்மோர்  தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

இதையடுத்து ஒரு மாத காலம் முடிந்து அந்த 47  குடும்பங்களும் மீண்டும் அப்பகுதிக்கே திருப்பி அனுப்பபட்டார்கள். 

இந்நிலையில் கடந்த ஜனாதிபதி  தேர்தல்  காலத்தில் இவர்களுக்கு மாற்றிடங்களில் வீடுகள் அமைத்து கொடுப்பதாக மலையக அரசியல் தலைமைகள் வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் இன்று வரை கவனம் செலுத்தப்படவில்லை.

மழை காலங்களில் தாம் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும்  எந்த  நேரத்திலும் ஆபத்து நேரலாம் எனவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மலைநாட்டு புதிய கிராமங்கள்  உட்கட்டமைப்பு அமைச்சின் மூலமாக பல்வேறு இடங்களில் வீடமைப்பு திட்டங்கள் கடந்தகாலத்தில் நடைமுறைபடுத்தப்பட்டு வந்தாலும் இவ்வாறான பகுதிகளுக்கு தனி வீட்டு திட்டம் என்பது எட்டாகனியாகவே உள்ளது. எனவே புதிய அரசாங்கமாவது கவனம் செலுத்துமா என மக்கள் கேட்க்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56