இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களால் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸி. 

Published By: Vishnu

24 Nov, 2019 | 12:38 PM
image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, தோல்வி அடைந்ததுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. 

தற்போது இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 

முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நடந்து வந்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 240 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி 580 ஓட்டங்களை குவித்தது. இதன் மூலம் 340 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. 

டேவிட் வோர்னர் 154 ஓட்டங்களையும், லபுஸ்சேக்னே 185 ஓட்டங்களையும் எடுத்தனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் யாஷிர் ஷா 4 விக்கெட்டுகளையும் ஷகின் ஷா அப்ரிதி, ஹரிஸ் சோஹைல் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்களை எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 

சிறிது நேரம் தாக்குப் பிடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பாபர் அசாமுடன் இணைந்தார் மொஹமட் ரிஸ்வான். இருவரும் நிலைத்து நின்று போராடினர். 

சதம் அடித்த பாபர் 104 ஓட்டங்களிலும் ரிஸ்வான் 95 ஓட்டங்களிலும் ஆட்மிழந்தனர். அடுத்து வந்த யாசிர் ஷா 42 ஓட்டங்களை பெற்றார். அணியில் வேறு யாரும் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடாத காரணத்தினால், 335 ஓட்டங்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

இதனால் அவுஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. 

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் லபுஸ்சேக்னே தெரிவானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21