இழு­ப­றியில் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி ரணில், சஜித் தரப்­புக்கள் விடாப்­பிடி: நடக்கப்போவதென்ன..?

Published By: J.G.Stephan

24 Nov, 2019 | 10:54 AM
image

(ஆர்.ராம்)

எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­விக்கு யாரை முன்­மொ­ழி­வது என்­பது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினுள் தொடர்ந்தும் இழு­ப­றி­யான நிலைமை நீடிக்­கின்­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ அணி­யி­ன­ரி­டையே கடு­மை­யான போட்டி நிலவி வருகின்றது. 

முன்­ன­தாக கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பெயரை எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­விக்கு முன்­மொ­ழிந்து கடிதம் அனுப்­பி­யுள்ள நிலையில் 45 உறுப்­பி­னர்கள் கையொப்­பத்­துடன் சஜித் பிரே­ம­தா­ஸவின் பெயரை அப்­ப­த­விக்கு முன்­மொ­ழிந்து கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்­தனர். 

பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களின் பிர­காரம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சியல் கட்­சி­யொன்றில் அதன் செய­லா­ளரால் முன்­மொ­ழி­யப்­ப­டு­ப­வரே எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ராக நிய­மிக்­கப்­ப­டுவார். அவ்­வா­றான நிலையில் கட்­சியின் தலைவர் என்ற வகை­யிலும், செய­லா­ளரால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளவர் என்ற வகை­யிலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கே எதிர்க்­கட்­சித்­த­லைவர் பதவி வழங்­கப்­ப­ட­வுள்­ளது. 

எனினும்   முன்­னைய  சந்­தர்ப்­பத்தில் அநுர பண்­ட­ர­நா­யக்க அவர் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய கட்­சியின் சார்பில் அதி­க­ளவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பரிந்­து­ரைத்­த­மையின் கார­ணத்­தி­னா­லேயே எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். ஆகவே பாரா­ளு­மன்ற வர­லாற்றில் அதி­க­ளவு உறுப்­பி­னர்­களின் விருப்­பிற்கு அமை­வாக எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­பட்­டுள்ள முன்­னு­தா­ர­ணத்­தி­னையும், ஹன்சாட் சான்­று­க­ளையும் முன்­னி­லைப்­ப­டுத்தி சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு எதிர்க்­கட்­சித்­த­லைவர் பத­வியை வழங்க வேண்டும் என்று அழுத்­த­ம­ளிப்­ப­தற்கு அவ­ரது அணி­யினர் திட்­ட­மிட்டு வரு­கின்­றனர். 

ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் இவ்­வாறு ஏட்­டிக்­குப்­போட்­டி­யான நிலை­மைகள் ஏற்­பட்­டுள்ள நிலையில் ,நாளை திங்­கட்­கி­ழமை ரணில், சஜித் அணி­யினர் தனித்­த­னி­யாக அடுத்த கட்ட நகர்­வுகள் குறித்து கூடி ஆரா­ய­வுள்­ள­தாக இரு­த­ரப்பு தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன. 

அத்­துடன் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சஜித் அணி­யி­னரின் கடந்த கால பாரா­ளு­மன்ற முன்­னு­தா­ர­ணத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தும் திட்­டத்­தினை அறிந்­து­கொண்­டுள்ள நிலையில்  கட்­சிக்குள் தற்­போது ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­யான நிலை­மை­களை கட்­டுப்­பாட்­டிற்­குள்­கொண்டு வரு­வ­தற்கு பதவி நிலை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வது குறித்து தனக்கு நெருங்­கிய தரப்­பி­ன­ருடன் ஆலோ­சித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது. 

சஜித் அணி­யினர் கட்­டுக்குள் அடங்­காது கட்­சியைப் பிள­வு­ப­டுத்தும் எல்­லைக்குச் செல்­வார்­க­ளாயின், உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் சபா­நா­யகர் பத­வி­யி­லி­ருக்கும் கரு ஜய­சூ­ரி­யவை அப்­ப­த­வி­யி­லி­ருந்து விலகச் செய்து ஐ.தே.க.வின் தலை­மைப்­ப­த­வியை வழங்­கு­வது பற்­றியும் ஆராய்ந்­தி­ருக்­கின்றார். 

அத்­துடன் தற்­போது வெற்­றி­ட­மா­கி­யுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர், தவிசாளர், தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு புதியவர்களை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளும் திரைமறைவில் எடுக்கப்பட்டுள்ளன. 

இப்பதவிகளுக்கு நவீன் திஸாநாயக்க, தயா கமகே, ருவான் விஜேவர்த்தன போன்றவர்களை நியமிப்பது பற்றியும், சிறுபான்மை சமூகத்தினைச் சேர்ந்த ஒருவரை உள்ளீர்ப்பது பற்றியும் சிந்தித்து வருவதாகவும் மேலும் அறிய முடிகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24