கொழும்பில் டெங்கு அபாயம் அதிகரிப்பு!   

Published By: R. Kalaichelvan

23 Nov, 2019 | 04:50 PM
image

(ஆர்.விதுஷா)

மேல்மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு  தெரிவித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 15 ஆயிரத்து 632 பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு  உள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் டெங்கு நோய்த்தாக்கம் மேலும் அதிகரித்து செல்வதனை தடுப்பதற்காக சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு   பொதுமக்களிடம் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.  

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில்மாத்திரம்  இவ்வருடத்தின் இது வரையான  காலப்பகுதியில் 2 ஆயிரத்து 934 பேரும்  ,  கொழும்பின் ஏனைய பகுதிகளில் 12 ஆயிரத்து 698 பேரும் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

அத்துடன், கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 391 பேரும் ,    கொழும்பின் ஏனைய பகுதிகளில் 2ஆயிரத்து 23 பேரும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

அந்த வகையில் கடந்த மாதத்திலேயே  அதிகளவிலானோர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்ததுடன், 11 ஆயிரத்து 213 பேரே  இவ்வாறு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தனர். ஆயினும் இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10 ஆயிரத்து  273  பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் இது வரையில் சுமார் 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோய்  தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் சுமார் 2 ஆயிரத்து 970 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், அம்மாதமே இது வரையான காலப்பகுதியில் குறைந்தளவிலாநோர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளான   மாதமாக பதிவாகியுள்ளது.  

மேலும்,கொழும்பு ,கம்பஹா,கண்டி ,களுத்துறை ஆகிய பகுதிகளிலேயே டெங்கு நோய்த்தாக்கம் இம்மாதத்தில் அதிகரித்த மட்டத்தில்  காணப்படுகின்றது. 

அந்த வகையில் முறையே , கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 414  பேரும் ,  கம்பஹா மாவட்டத்தில் ஆயிரத்து 17 பேரும் , கண்டி மாவட்டத்தில் ஆயிரத்து 468 பேரும் , களுத்தறை மாவட்டத்தில் மாத்திரம் 695 பேர் வரையிலும்  இம்மாதத்தின் இது வரையான  காலப்பகுதியில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

கடந்த வருடத்தில் நவம்பர்  மாதத்தில் 4 ஆயிரத்து 537பேர்  வரையில் டெங்கு நோய்  தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில் இவ்வருடத்தில் நவம்பவர் மாதத்தில் டெங்கு  காய்ச்சல்  பரவும் வேகம்  அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது.  

மழையுடன் கூடிய  காலநிலையின் காரணமாக  டெங்கு நுளம்பு பரவும் வேகம் அதிகரித்து வருவதானால் நீர்தேங்கி நிக்கும் இடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி துப்புரவு சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்தியருப்பது பொதுமக்களின் பொறுப்பாகும். 

    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30