கூட்டமைப்பு  உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் -சி.தவராசா 

Published By: Daya

23 Nov, 2019 | 03:46 PM
image

அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

தீபாவளிக்குத் தீர்வு சித்திரை வருடத்தில் தீர்வு என்று மக்களை ஏமாற்றி, அரசியல் தீர்வு வரா விட்டால் அரசியலிலிருந்து ஒதுங்குவதாகக் கூறியிருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச்   சொல்லுங்கள் அதன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் பற்றி சிறிதரன் விமர்சிக்கலாம் என  சி.தவராசா தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலைக் குள்ளநரி என்று மக்கள் முன்னிலையில் தெரிவித்துவிட்டு  பின்னர் அதே ரணிலின் பின்னால் திரிகின்றார்.

அவ்வாறானவருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை விமர்சிக்கத் தகுதியில்லை.ரணிலை எத்தனை தடவைகள் எவ்வாறு எல்லாம் விமர்சித்தீர்கள் பின்னர் அதே ரணிலின் பின்னால் திரிகின்றீர்கள் இவ்வாறான சிறிதரன் முதலில் கண்ணாடியைப் பார்த்துவிட்டு மற்றவர்களை விமர்சிக்க வேண்டும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானதா விமர்சித்தவர்களின் பின்னால் ஒரு நாளும் அலைந்ததில்லை. பாராளுமன்ற அமர்வுகளில் சிறிதரன் ஏராளமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி உங்கள்  மீது பல வினாக்களைத் தொடுத்திருந்தார். எனினும் இன்றுவரை அவற்றுக்குப் பதிலைக் கூறியதில்லை.

தமிழ் மக்களை ஏமாற்றி ரணில் பின்னால் வால் பிடித்துக்கொண்டு திரியும் கூட்டமைப்பினரும் முக்கியமாக சிறிதரன் முதலில் உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள்.நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி போட்டியிடவில்லை.

மாறாக பெரமுனவின் சார்பாகப் போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்சவுக்கே ஆதரவு வழங்கியிருந்தது.அவரை வடக்கு கிழக்கு மக்கள் வேறு காரணங்களுக்கு நிராகரித்து இருக்கலாம். ஆனால் கடந்த உள்ளூராட்சி  தேர்தலில் மூன்று கட்சிகள் இணைந்து போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 154 ஆசனங்களைக் கைப்பற்றியது.எனினும் தனி ஒரு கட்சியாக ஈ.பி.டி.பி 71 ஆசனங்களைக் கைப்பற்றியது.

மக்கள் தற்போது தெளிவாகி வருகின்றனர்.முதலில் அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54