இந்த ஆட்சியிலாவது நியாயம் கிடைக்குமா; ரயில் கடவை ஊழியர்கள் எதிர்பார்ப்பு

Published By: Daya

22 Nov, 2019 | 03:58 PM
image

ரயில் கடவை ஊழியர்களுக்கு  புதிய ஆட்சியிலாவது தீர்வுகள் கிடைக்க வேண்டுமென  வடகிழக்கு ரயில்  கடவை ஊழியர் ஒன்றியத்தின் தலைவர் ரொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நாடு முழுவதும் 2064 ஊழியர்கள் ரயில் கடவை ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றனர். எமது பணிக்கான நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில் வெறும் 250 ரூபா சம்பளத்தில் மிகவும் சிரமப்பட்டு எமது குடும்ப வாழ்க்கையைக் கடந்த 7 வருடங்களாக நகர்த்தி வருகிறோம். எமக்கான நிரந்தர நியமனம், மற்றும் சம்பள அதிகரிப்பு தொடர்பாகக் கடந்த அரசிற்குப் பலமுறை தெரிவித்தும் அது தீர்க்கப்படாமல் அடிமைகளைப் போலவே நாம் நடத்தப்பட்டோம். 

எமக்கான தொழில் பாதுகாப்பு இல்லாத நிலையில்  நேற்று முன்தினம் கூட கட்டன் மல்லிகைப்பூ பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கடமையின் போது புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார்.  இது போல வருடாவருடம் விபத்துக்களும் உயிரிழப்புக்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. இதுவரை பல ஊழியர்கள் கடமையின் போது விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அவரது ஆட்சியில் நாடு சுபீட்சமடைந்து மக்களுக்கான விடுதலை கிடைத்து அடிமைப்படுத்தப்பட்டு, அரசியல் பழிவாங்கலிற்கு உட்படுத்தப்பட்டவர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என நம்புகிறோம். 

நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை நேரடியாகச் சந்தித்து எமது பிரச்சினைகள் தொடர்பாகத் தெரிவித்திருந்தோம். அவர் எமது பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

எனவே தற்போது அவர் பிரதமராகப் பதவி ஏற்றுள்ள நிலையில் எமக்கு வாக்குறுதி அளித்தபடி எமக்கான தீர்வினை பெற்றுதர வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்பு என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46