பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ!

Published By: Vishnu

22 Nov, 2019 | 02:07 PM
image

சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சர்கள் கூட்டாகவும், தனித்தனியாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவில் நடப்பு அரச தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்வியை அடுத்து அந்த அரசாங்கத்தின் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கான இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்று நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 

இதன் பின்னர் பிரதமராக நியனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ மத அனுஷ்டான நிகழ்வுகளுடன் அலரிமாளிகையில் தனது கடமை பொறுப்புக்களை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந் நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கான  உறுப்பினர்கள் 15 பேர் தமக்கான அமைச்சரவை நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டனர். 

அதன் விபரம் பின்வருமாறு :

மஹிந்த ராஜபக்ஷ - நிதி, பொருளதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி, புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும் பதவியேற்றார்.

1. மஹிந்த ராஜபக்ஷ – நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், கலாசாரம், நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் அமைச்சர்

2. நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமை மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்

3. ஆறுமுகன் தொண்டமான் – தோட்ட உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சர்

4. தினேஷ் குணவர்தன – வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர்

5. டக்ளஸ் தேவானந்த – மீன்பிடி, நீரியல் வள அமைச்சர்

6. பவித்ராதேவி வன்னியாரச்சி – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், சமூக பாதுகாப்பு, சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர்

7. பந்துல குணவர்தன – தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர்

8. ஜனக்க பண்டார தென்னகோன் – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர்

9. சமல் ராஜபக்ஷ – மகாவலி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி, உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு, நுகர்வோர் நலன்கள் அமைச்சர்

10. டளஸ் அழகப்பெரும – கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர்

11. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – வீதி, பெருந்தெருக்கள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர்

12. விமல் வீரவன்ச – சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல்  முகாமைத்துவ அமைச்சர்

13. மஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர்

14. எஸ்.எம்.சந்திரசேன - சுற்றாடல், வனஜீவராசிகள், காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர்

15. ரமேஷ் பத்திரன – பெருந்தோட்டத் துறை, ஏற்றுமதி விவசாயம் அமைச்சர்

16. பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35