பூங்கொத்துக்கு  பதில் புத்தகங்கள் ;  எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டு..!

Published By: Digital Desk 4

21 Nov, 2019 | 06:20 PM
image

“என்னைப் பார்க்க வரும் பொதுமக்கள், பூங்கொத்துக்கு பதிலாக நல்ல புத்தகங்கள் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தியாவின் கேரள மாநிலம் வட்டியூர்க்காவு தொகுதியைச் சேர்ந்தவர் வி.கே.பிரசாந்த். இவர், சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.இதையடுத்து அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த உள்ளூர் அரசுப் பள்ளி நிர்வாகிகள், “எங்கள் மாணவர்களுக்கு நூலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் பிரசாந்த், கடந்த 14 ஆம் திகதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “என்னைப் பார்க்க வரும் பொதுமக்கள், பூங்கொத்துக்குக்கு பதிலாக நல்ல புத்தகங்களை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, அவரை சந்திக்கச் செல்லும் அனைவரும் புத்தகங்களை வழங்கத் தொடங்கினர். “இதன்மூலம் தற்போது, 3,500க்கும் அதிகமான புத்தகங்கள் வந்துள்ளன. விரைவில் அந்த புத்தகங்களை, அரசுப் பள்ளிகளுக்கு வழங்கவுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் பிரசாந்தின் இந்த செயலுக்கு, பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17