"உலகத் தமி­ழ­ருக்கு தேசிய தலைவர் பிர­பா­கரன் மட்­டுமே": கருணா

Published By: J.G.Stephan

21 Nov, 2019 | 01:16 PM
image

இறுதி யுத்­தத்தின் பின் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­வா­கவே நான் யுத்தம் இடம்­பெற்ற இடத்­துக்கு சென்று சட­லத்தை அடை­யா­ளப்­ப­டுத்­தி­னே தவிர அதற்கு முன் நான் ஒரு போதும் அப்­ப­கு­திக்கு செல்­ல­வில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா) தெரி­வித்­துள்ளார்.

மன்­னாரில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பின்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்­டுள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

இறுதி யுத்­தத்தில் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக கூறு­கின்­றார்கள். நீங்கள் மட்டும் சென்று உறு­தி­ப்ப­டுத்தி கூறினால் மட்­டுமே நான் நம்­புவேன் என அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ என்­னிடம் கூறினார்.

நான் அவ்­வாறு நடந்­தி­ருக்­கக்­கூ­டாது என நினைத்து களத்­துக்குச் சென்றேன். அங்கு சென்று பார்த்தேன் அவர் தான். ஆனால் அத­னைக்­கூட எங்­க­ளு­டை­ய­வர்கள் உரிமை கோரு­கின்­றார்கள் இல்­லையே.

அவர் வருவார், அவர் வருவார் என அவரை வெளிநாட்டில் விற்­றுக்­கொண்டே இருக்­கின்­றார்கள். அவர் செய்­தது ஒரு வீரத்­தி­யாகம். இன்று நாங்கள் சுபாஸ் சந்­தி­ரபோஸ் அவர்­களை எப்­படி பாராட்­டு­கின்றோம். ஆனால் இன்னும் இவரை நாங்கள் மாவீரர் பட்­டி­யலில் சேர்க்­க­வில்லை. சேர்த்தால் அது ஒரு வர­லாறு.

நேற்று முளைத்த அர­சியல் தலைவர் ஒரு­வரை மேடையில் வைத்து ஒருவர் பேசு­கின்றார் எங்­க­ளு­டைய அண்ணன் தேசியத் தலைவர் இங்கு இருக்­கின்றார். தமிழ்த் தலைவன் என உரை போகின்­றது.

ஆனால் அவர் அர­சி­ய­லுக்கு வந்து மூன்று வரு­டங்­களும் இல்லை. உல­கத்­தி­லேயே தமி­ழ­னுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன். அதுதான் தலைவர் பிர­பா­கரன். வாறவன் போறவன் எல் லாம் தலை­வ­னா­கிட முடி­யுமா? தேசி யத் தலை­வ­ருடன் நான் 30 வரு­டங்கள் இருந்­துள்ளேன்.

எனவே அன்­றைய போராட்­டங்­களை இன்­றைய கால­கட்­டத்தில் அர­சியல் வடி­வத்தில் கொண்டு செல்ல வேண்­டிய நிலையில் உள்ளோம். மாற்றம் ஒன்றை உரு­வாக்க வேண் டும். நேரத்­துக்கு நேரம் தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களை ஏமாற்றிக் கொண்டு இருக்­கின்­றது. அதற்கு பின்னால் நாங்கள் ஓடத் தொடங்­கினோம் என்றால் பிழைத்து விடும்.

எனவே மக்­க­ளா­கிய நீங்கள் நிதா­ன­மா­கவும், கவ­ன­மா­கவும் சிந்­தி­யுங்கள். நாங்­களும் தமிழ் ஐக்­கிய சுதந்­திர முன்­னணி என்­கின்ற கட்­சியை தொடங்­கினோம்.

உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் சுமார் 70 பேர் உட்­பட உறுப்­பி­னர்கள் பலர் இருக்­கின்­றார்கள். இக்­கட்­சியை வடக்கு, கிழக்கு ரீதி­யாக வளர்க்க வேண்டும் என்­பதே எனது விருப்                           பம்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உடைந்து போகும் என எனக்கு நன்­றாக தெரியும். அக்­கட்சி ஏற்­க­னவே உடைந்து போய் விட்­டது. விக்­னேஸ்­வரன் ஒரு பக்கம், சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் ஒரு பக்கம் என பிரிந்து கிடக்­கின்­றது.

எனவே எமது கட்­சியை உறு­தி­யான கட்­சி­யாக வளர்த்து எடுக்க வேண்டும். மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது சில திட்­டங்­களை அவ­ருடன் கதைத்தேன். அப்­போது சிறி­லங்கா சுதந்­திர கட்­சியின் உப தலை­வ­ராக நான் இருந்தேன்.

இது­வரை ஒரு தமி­ழனும் அக்­கட்­சியில் அப்­ப­த­வியில் இருக்­க­வில்லை. எனினும் எனக்கு தொடர்ந்தும் அப்­ப­த­வியில் இருக்க விருப்பம் இல்லை. மைத்­தி­ரியை ஜனா­தி­ப­தி­யாக்க வேண் டும் என சம்­பந்தன் தலை­மை­யி­லானோர் முயற்சி செய்­தனர்.

ஜனா­தி­ப­தி­யா­கவும் கொண்டு வந்­தனர். ஆனால் ஒரு அர­சியல் கைதி­யை க்­கூட மைத்­திரி, ரணில் ஆகியோர் விடு­தலை செய்­ய­வில்லை. சுமார் 334 அர­சியல் கைதிகள் மாத்­தி­ரமே உள்­ளனர். 12 ஆயிரம் முன்னாள் போரா­ளி­களை மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியில் புனர்­வாழ்வு வழங்கி நாங்கள் விடு­தலை செய்தோம்.

அவர்­களில் ஆட்­லரி இயக்­கிய தலை­வரில் இருந்து பெரிய பெரிய தள­பதி எல்லாம் வெளியில் இருக்­கின்­றார்கள். இல்­லாது விட்டால் அவர்­களை எல் லாம் சுட்­டுத்­தள்ளி இருப்­பார்­களே. குறித்த கால கட்­டத்தில் அர­சியல் கைதி­களின் கதையே வர­வில்லை.

அவர்கள் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதம் இருந்த போதே இப்­ப­டி­யான சிலர் உள்ளே இருக்­கின்­றார்கள் என்­பது தெரி­ய­வந்­தது. எனினும் தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ அவர்­களை விடு­விப்­பது என உறுதி வழங்­கி­யுள்ளார். எனவே அவர்கள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள். சட்­டச்­சிக்கல் இருக்­கின்­றது. எனினும் அவர்கள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள். அதற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன.

சிறு­பான்மை மக்கள் எனக்கு வாக்­ க­ளித்­தார்­களோ இல்­லையோ. சிறு­ பான்மை இன மக்­க­ளையும் இணைத் துக் கொண்டு தான் எங்­க­ளு­டைய பயணம் தொடரும் என அவர் தெரி­வித்­துள்ளார்.

சரத் பொன்­சே­கா­வுக்கு தமிழ் மக் கள் வாக்களிக்க முடியும் என்றால் ஏன் கோத்தாவிற்கு வாக்களிக்க முடி யாது? சரத் பொன்சேகா நேரடியாக சீருடையுடன் சண்டை பிடித்தவர்.

எங்களவர்களை கொன்றதில் சரத் பொன்சேகாவுக்கும் பங்கு உள்ளது. எனினும் அன்றைய காலகட்டத்தில் மஹிந்த ராஜபக் ஷ வடக்கு கிழக்கு மக்களை கைவிடவில்லை. பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெ டுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04