தமிழ் , முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் ஐ.தே.க.வை காப்பாற்றவே முயற்சித்தனர் - டிலான்

Published By: R. Kalaichelvan

21 Nov, 2019 | 01:34 PM
image

(ரொபட் அன்டனி)

எமது அரசியல் பயணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காஙகிரஸ்  ஆகிய கட்சிகளின்  தலைவர்களை இணைத்து கொள்ளக் கூடாது.

மாறாக முஸ்லிம் மக்கள்  எதிர்காலத்தில் மதவாதத் தலைவர்களைத்  தெரிவு செய்ய முன்வர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

தற்போதைய நிலைமையில் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவதே  சிறந்ததாக அமையும். காரணம் அந்த விடயத்தையே நாங்கள் தேர்தல் மேடைகளில் கூறினோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மற்றும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விபரிக்கையிலேயே அவர்  இதனைக் குறிப்பிட்டார்.

அவர் இந்த விடயம் குறித்து மேலும் விபரிக்கையில்,

கடந்த நான்கரை வருடங்களாக நான் எந்த விடயத்தை  மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினேனோ அதுவே தற்போது நடைபெற்றுள்ளது. தமிழ் மற்றும்  முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கடந்த காலம் முழுவதும் ஐக்கிய தேசிய கட்சியின் நலனுக்காக வேலை செய்தனரே தவிர  தமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க  முயற்சிக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதையே முதன்மையாக செய்து கொண்டிருந்தனர்.மாறாக  தமது மக்களுக்கு என்ன நடக்கின்றது என்று சிந்திக்கவில்லை.  

எனவே இந்த நிலையை  சிங்கள மக்கள் பார்த்து அவர் களுக்கு பதில் அளித்துள்ளனர்.  தான்  சிங்கள மக்களின் வாக்குகளால்தான் ஜனாதிபதிப் பதவிக்கு வந்துள்ளேன் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில்  சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை அரவணைத்துக்கொண்டு  பயணிக்கத் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாங்கள்  தமிழ், முஸ்லிம்  மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அணுகுமுறைகளைச் செய்ய வேண்டும்.

ஆனால் அதற்கு  தமிழ், முஸ்லிம் மக்கள் தற்போதைய  தலைவர்களை நிராகரித்துவிட்டு  மாற்றுத் தலைவர்களை உருவாக்க வேண்டியது அவசியமாகும். முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை  பேரியல் அஷ்ரப் போன்ற தலைவர்கள் வெளியே வர வேணடும் என்று நான்  கூறுகின்றேன்.

இதுவொரு உதாரணம் மட்டு மேயாகும்.பஷீர் சேகு தாவுத் என்பவர் தமிழ்  மக்களின் பிரச்சினைகளையும் ஆழமாக அறிந்த முஸ்லிம் தலைவர். எனவே அவர் போன்றவர்கள்  தெரிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறான  மிதவாதத் தலை வர்கள் மூலமாகவே  முஸ்லிம்  மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். மாறாக தற்போது இருக்கின்ற தலை வர்கள்  ஐக்கிய தேசிய கட் சியைக் காப்பாற்றவே முயற் சிப்பார்கள்.

எமது அரசியல் பயணத்தில் இனி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  ஆகிய கட்சிகளின்  தலைவர்களை இணைத்து கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன். ரிஷாத், ஹக்கீம் போன்றவர்களுக்கு எமது அரசியல் பயணத்தில் இனி இடமில்லை.

தமிழ், முஸ்லிம் மக்களை  அரவணைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது  தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். என்னைப் போன்ற தலைவர்கள் எப்போதும்  தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு  முக்கிய  இடம் வழங்கப்படவேண்டும் என்பதைக்  கூறி வந்துள்ளோம்.

ஆனால் கடந்த  ஐந்து வருடங்களில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வும் கிடைக்கவில்லை, அபிவிருத் தியும் கிடைக்கவில்லை.  மக்கள் ஏமாற் றப்பட்டனர். அத்துடன்  தமிழ் மற்றும் முஸ்லிம்  கட்சிகளின்  தலைவர்கள்   மக்களின் பிரச்சினைகள் பற்றி சிந்திக்காமல் ஐக்கிய தேசிய கட்சியைக் காப்பாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்தனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46