கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 8 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படவுள்ளதாக சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த கல்வி அமைச்சர் ஹானு மனுப்பிரிய தெரிவித்துள்ளார். இதனால் 11 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின் காரணமாக நாடு பூராகவுமுள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டது.

அவ்வாறான பல பாடசாலைகள் இன்று கல்வி நடவடிக்கைளுக்காக திறக்கப்படவுள்ளது.

எனினும், கேகாலை மாவட்டத்தில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படும் அபாயங்கள் காணப்படுகின்றது.

எவ்வாறாயினும் மூடப்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும்  மாணவர்களுக்கு அருகிலுள்ள வேறு பாடசாலைகளை ஒதுக்கி கொடுக்கவுள்ளதாகவும் இது குறித்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.