பொதுதேர்­தலில் வடக்கு – கிழக்கு  உட்­பட அனைத்து தொகு­தி­க­ளிலும் போட்­டி­யி­டுவோம்: குமார் குண­ரட்ணம்

Published By: J.G.Stephan

21 Nov, 2019 | 11:34 AM
image

 (ஆர்.விதுஷா)

பொதுத்­தேர்தல் தொடர்­பான  திகதி  அறி­விக்­கப்­பட்டால் அதில் போட்­டி­யி­டு­வது  தொடர்­பான  தீர்­மானம்  எடுக்­கப்­படும் என்று தெரி­வித்த முன்­னிலை சோஷ­லிச கட்­சியின் முக்­கிய தலை­வர்­களில் ஒரு­வ­ரான குமார் குண­ரட்ணம் பொதுத் தேர்­தலில் போட்­டி­யிடும் பட்­சத்தில் வடக்கு - கிழக்கு மாகா­ணங்கள்  உட்­பட  அனைத்து தேர்தல் தொகு­தி­க­ளையும்  உள்­ள­டக்­கிய வகை­யி­லேயே போட்­டி­யி­ட­வுள்­ள­தா­கவும்  அவர் குறிப்­பிட்டார்.  

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் எமது கட்­சியை சேர்ந்த  இரண்டு பேர் கடத்­தப்­பட்டு காணாமல்  ஆக்­கப்­பட்­டனர். அவ்­வா­றான அச்­சு­றுத்­தல்­க­ளைக்­கண்டு மீண்டும் நாம் பின்­வாங்­கப்­போ­வ­தில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார். ஜனா­தி­பதி தேர்­தலில் முன்­னிலை சோஷ­லிச  கட்­சி­ சார்பில் துமிந்த நாக­முவ போட்­டி­யிட்­டி­ருந்தார். புதிய  ஜனா­தி­ப­தி­யாக  கோத்த­ப­ாய­ ரா­ஜ­­ப­க் ஷ தெரி­வா­கி­யுள்­ள­தை­ய­டுத்து  கட்­சியின் எதிர்­கால  நட­வ­டிக்­கைகள் தொடர்பில்  வின­வி­ய­போதே அவர்  கேச­ரிக்கு  இவ்­வாறு தெரி­வித்தார்.  அவர்  மேலும்  கூறி­ய­தா­வது,  

பொதுத்­தேர்தல் இடம் பெற­வுள்ள  நிலையில், அந்த தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கும்  எதிர்­பார்த்­துள்ளோம்.  அதற்­கான தீர்­மானம்  பொதுத்­தேர்­த­லுக்­கான  திகதி  குறிப்­பி­டப்­பட்ட  பின்னர்  எடுக்­கப்­படும்.  அவ்­வாறு  போட்­டி­யிடும்  பட்­சத்தில்  வடக்கு – கிழக்கு  மாகா­ணங்­க­ளையும்  உள்­ள­டக்­கிய  வகை­யி­லேயே    தேர்­தலில்  கள­மி­றங்­குவோம்.  ஜனா­தி­பதி  தேர்­தலின்  போது எமது  கட்­சியின்  ஆத­ர­வா­ளர்­களே  வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.  அவர்­க­ளுக்கு  மேல­தி­க­மாக  கணி­ச­மான வாக்­குகள் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. இன­வாத ரீதியில் சமூகம் பிரிந்­துள்­ளது. அந்த வகை­யி­லேயே கோத்த­பாய  ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார். அவ­ருக்கு மாறா­கவே  வடக்கு, கிழக்கில் வாக்­க­ளிப்பு இடம்  பெற்­றுள்­ளது. அதன் ஊடாக ஜன­நா­யக விரோத நிலைமை உரு­வா­கலாம். ஆகவே, அதற்கு  எதி­ராக  மக்கள்  சக்­தியை  ஒன்று  திரட்ட வேண்­டி­யது  அவ­சி­ய­மா­ன­தாகும். அவ்­வா­றான இன­வாத சூழ்­நி­லையில்  சோஷ­லி­சத்தை ஏற்­ப­டுத்­து­வ­தென்­பது  கடி­ன­மான விட­ய­மாகும். ஆகவே   சோச­லி­சத்தின் ஊடாக மக்கள்  மத்­தியில்  ஏற்­படும் இன­வா­தத்தை  இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான  அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் எதிர்­வரும் காலங்­களில் முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.  கடந்த காலங்­களில் முத­லா­ளித்­துவ கட்­சிகள் பல நாட்டை  ஆட்சி  செய்­துள்­ளன. அந்த கட்­சி­க­ளுக்கு தமிழ்,  முஸ்லிம்  மக்­களை  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களும்  தமது ஆத­ரவை  வழங்­கி­யுள்­ளன.

30 வரு­ட­கால யுத்தம் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யிலும்  கூட இன்­னமும் இன­வாத நிலை  சமூ­கங்­களின் மத்­தியில்  காணப்­ப­டு­கின்­றது.அந்த  இன­வாத  சக்­திகள் ஏப்ரல் குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பின்னர் வலுப்­பெற்­றுள்­ளன.  ஆகவே   இன­வாதம் மற்றும் முத­லா­ளித்­து­வத்தை  இல்­லா­தொ­ழிப்­ப­தற்­காக சிங்­கள, தமிழ்,  முஸ்லிம்  மக்­களும்  ஒன்­றி­ணைந்து   போரா­டு­வ­த­னூ­டாக சோஷ­லி­சத்தை  ஏற்­ப­டுத்த போராட  வேண்டும்.  

2012 இல்  எமது கட்சி  ஸ்தாபிக்­கப்­பட்­டதன் பின்னர்   எமக்கு  எதி­ரான  பல  சக்­தி­க­ளுடன் போரா­ட­வேண்­டிய  நிலைமை  காணப்­பட்­டது. எமது கட்­சியை  சேர்ந்தோர்  கடத்தி  காணாமல்  ஆக்­கப்­பட்­டனர். அந்த நட­வ­டிக்­கைகளை மேற்­கொண்­ட­வர்­க­ளு­டைய  ஆட்­சியே  மீண்டும்  வந்­துள்­ளது.  ஆயினும்  அந்த சக்­தி­களை எதிர்­கொண்டு  இப்­போது  உறு­தி­யான நிலையை அடைந்­துள்ளோம். இந்­நி­லையில்  மீண்டும் கோத்த­பாய  ராஜ­ப­க் ஷ  தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினால்    அச்­சு­றுத்தல்  நிலைகள்  ஏற்­ப­டினும் அதனைக்  கண்டு பின்­வாங்­கப்­போ­வ­தில்லை.  

தொழி­லாளர் வர்க்­கத்­தி­ன­ருக்கு எதி­ராக  எழும் பிரச்­சி­னை­களின்  போது அவர்­க­ளுக்­காக  குரல்­கொ­டுக்­கவும்  அவர்­க­ளுடன்  இணைந்து  போரா­டு­வ­தற்கும் தயாராகவுள்ளோம்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04