ரணிலும் சுமந்­தி­ரனும் மேற்­கொண்ட சதி­யி­னா­லேயே  சஜித் பிரே­ம­தாச தோற்­க­டிக்­கப்­பட்டார் - சிவா­ஜி­லிங்கம்

Published By: Daya

21 Nov, 2019 | 11:29 AM
image

(தி.சோபிதன்)

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­தி­ரனும் மேற்­கொண்ட சதி­யி­னா­லேயே சஜித் பிரே­ம­தாச தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்தார்.

நடை­பெற்று முடிந்­துள்ள ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்­துக்­களை தெரி­விக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

 நீங்கள் இவ்­வ­ளவு தூரம் போரா­டியும் 13 இலட்சம் வாக்­கு­களால் கோத்­த­பாய வெற்றி பெற்­றுள்ளார். இவ்­வாறு வெற்றி பெற்ற நிலையில் தமிழ் மக்­க­ளுக்கு நீங்கள் செய்த வேலை இரா­ஜ­தந்­தி­ரமா? ஒரு­வி­ட­யத்­தில் ­தோல்வி ஏற்­பட்டால் இரண்­டா­வது திட்­ட­மிடல்  இருக்க வேண்டும்.இவர்­க­ளிடம் அப்­படி ஏதும் இருந்­த­தாக இல்லை. அதனை எதிர்­பார்க்க முடி­யாது.

கூட்­ட­மைப்பு சஜித்தை ஆத­ரிப்­பது என்­பது திட்டம் என்றால் சஜித் வெற்றி பெறா­விட்டால் அடுத்த திடடம்  என்ன என்­று ­ஏதும் வைத்­தி­ருந்­தீர்­களா. என்னைப் பொறுத்­த­வ­ரையில் அநி­யாயம் செய்­ப­வர்கள்  இரண்டு பேருமே என்று கூறி­யி­ருந்தோம். யார் வந்­தா­லும்­ எங்­க­ளுக்கு பிரச்­ச­ினை­யில்லை. எதற்கும் நாங்கள் தயார். ஆக வீழ்­வது நாமாக இருந்­தாலும் வாழ்­வது தமிழ் மக்­க­ளாக இருக்க வேண்­டு­மென்ற அடிப்­ப­டையில் நாங்கள் எங்கள் மக்­க­ளுக்கு­ எங்­களை நாங்­களே ஆளக் கூடிய தீர்வை எடுத்துக் கொடுப்­ப­தற்கு அதா­வது அத்­தனை பேரும் கட்சி பேதங்­களைக் கடந்து தமி­ழன்­ என்ற உணர்­வோடு வீறு நடை­போட வேண்டும்.

தேர்தல் பரப்­புரை ஆரம்­பத்­தில்­ சிங்­கள பௌத்த இன­வெறிக் கூச்சல் உச்சக் கட்­டத்தில் இருக்கும் போது கூட்­ட­மைப்­பு­ உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆத­ரவைக் கொடுத்தால் ஆத­ரவு கொடுக்கும் தரப்­பிற்கு அது தென்­னி­லங்­கையில் பாரிய வாக்கு வங்­கி­யை­ வீழ்ச்­சி­யடைச் செய்யும் என்று பலர் நம்­பி­னார்கள். அதிலே உண்­மையும் இல்­லாமல் இல்லை. அது தான் கள­ நி­லை­வரம். அதுதான் உண்மை.

அவ்­வா­றான நிலைப்­பாட்டில் இருந்த கூட்­ட­மைப்­பினர் குறிப்­பாக தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினர் இங்கே நடை­பெற்ற கிராம மட்­ட­க­ருத்­த­ரங்­கு­க­ளிலே நாங்கள் பகி­ரங்­க­மாகச் சொல்ல முடி­யாது என்றும் நீங்கள் கீழ் மட்­டத்தில் வேலை செய்­யுங்­கள்­ என்றும் மக்­க­ளிடம் சொன்­ன­வர்கள் திடீரென்று வவு­னி­யா­விலே தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம் கூட்­டப்­பட்­டு­ அ­துவும் கூட்­ட­மைப்பின் மூன்று கட்­சி­களைக் கூட அழைத்து பேசாமல் தாமாக அவ­ச­ர­மாக அறி­வித்­ததன் பின்­னணி என்ன--?

நிலை­மைகள் இவ்­வா­றி­ருக்­கையில் சஜித் பிரே­ம­தாச விட்ட தவறு என்­ன­வென்றால் நான் ஒரு புதிய பிர­த­ம­ரை­ நி­ய­மிப்பேன் என்று கூறி­யது தான். அத­னோடு ரணில் விக்­கி­ர­ம­சிங்க அலேட் ஆகி­விட்டார். அவர் அர­சி­யலில் ஒரு­நரி. நரித்­தந்­திரம் கொண்­டவர். ஆக அந்த ஐயா சொல்லி எங்­கட ஐயா சேர்ந்து தான் இதனைச் செய்­தி­ருக்­கி­றார்கள்.இதற்கு பணப்பட்டுவாடா நடந்ததாக சொல்லப்படுகிறது.

கூட்டமைப்பு  இப்பொழுது இந்த நிலைக்கு தமிழர்களை கொண்டு வந்து விட்டுள்ளது. கோத்தா, மஹிந்த,  ரணிலோடு சேர்ந்து தீர்வைக் கொண்டு வாருங்கள். நாங்கள் சந்தோசப்­படுகிறோம். அது உங்கள் இராஜதந்திரம் என்றால் நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53