வேறொருவரின் அடையாள அட்டையை பயன்படுத்தி கடன் பெற்ற பெண் கைது

21 Nov, 2019 | 12:40 PM
image

வேறொருவருடைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வங்கி ஒன்றிலிருந்து கடன் பெற்று மோசடி செய்த பெண் ஒருவரைக் கைது செய்துள்ள நிக்கவரெட்டி பொலிஸார் அப்பெண்ணை நிக்கவரெட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை இன்று வியாழக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நிக்கவரெட்டிய நீதவான் திருமதி ரசிகா லக்மாலி தசநாயக்கா நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.

வாசிகல பலல்ல எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட் டவராவார்.

குறித்த சந்தேக நபரான பெண் வீதியில் கண்டெடுத்த வேறொருவருடைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி நிக்கவரெட்டி நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த  தவறியுள்ளதோடு பிரதேசத்தை விட்டும் தப்பிச் சென்றி ருந்துள்ளார்.

 இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை இப்பெண் தனது வீட்டுக்கு வந்துள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் அப்பெண்ணைக் கைது செய்துள்ளனர்.  பொலிஸார் அப்பெண்ணைக் கைது செய்யச் சென்ற போது அப்பெண் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளதோடு பொலிஸார் துரத்திச் சென்று கைது செய்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் காணாமல் போன தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தியுள்ள சந்தேகநபரான பெண் தனியார் வங்கியொன்றிலிருந்து ஒன்றரை இலட்சம் ரூபாய் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாகவும்,  அக்கடனுக்கான மாதத் தவணைகளைச் செலுத்த தவறிய காரணத்தினால் அது தொடர்பில் அடையாள அட்டையின் சொந்தக் காரியான பெண்ணுக்கு வங்கியினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் அப்பெண் நிக்கவரெட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 இந்த முறைப்பாட்டையடுத்து நான்கு மாதங்களாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே இவ்வாறு சந்தேக நபரான பெண்ணைக் கைது செய்ய முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் நிக்கவரெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19