தமி­ழர்­களின் உணர்வை புரிந்­து­கொள்­கிறோம் - கெஹெ­லிய

21 Nov, 2019 | 11:13 AM
image

(ரொபட் அன்­டனி)

வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தேர்தல் முடி­வு­களை பார்க்­கும்­போது தமிழ் மக்­களின் வேதனை எங்­க­ளுக்கு புரி­கின்­றது. அந்த  மக்­களின் உட­னடி தேவை என்ன என்­பது குறித்து நாங்கள்  நிச்­சயம்  ஆராய்ந்து பார்ப்போம் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். தேர்தல் முடி­வுகள் மற்றும் எதிர்­கால செயற்­பா­டுகள்  தொடர்பில்  கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே  அவர்  இதனை குறிப்­பிட்டார்.  

அவர் இந்த விடயம் குறித்து  மேலும் குறிப்­பி­டு­கையில்  

நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலில் எமது தரப்பு  வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ   அமோக வெற்­றி­யீட்­டி­யுள்ளார். இது­வொரு வர­லாற்று ரீதி­யான வெற்­றி­யாகும். ஐக்­கிய தேசிய கட்­சியை மக்கள் நிரா­க­ரித்­துள்­ளனர்.

ஆனால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ் மக்கள் அதி­க­ளவு எமது வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்­க­வில்லை.  எனினும் வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் வலியை நாங்கள் புரிந்­து­கொள்­கின்றோம்.

வடக்கு கிழக்கு தமிழ்  மக்கள் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு இழப்­புக்­களை சந்­தித்­த­வர்கள். எனவே அவர்­க­ளுக்கு அந்த வலி இருக்கும்.  அதனால்  தமிழ் மக்கள்  தேர்­தல்­களில் தமது எதிர்ப்பை பதிவு  செய்­கின்­றனர்.  

உதா­ர­ண­மாக  எனது  மகன் ஒரு தரப்­பி­னரால் தண்­டிக்­கப்­பட்டால் என்னால் பொறுத்­துக்­கொள்ள முடி­யாமல் போகும். எனது மகன் தவறு செய்­தி­ருந்­தாலும் கூட என்னால் அவர் தண்­டிக்­கப்­ப­டு­வதை தாங்­கிக்­கொள்ள முடி­யாது.   அந்த தரப்­பினர் பின்னர் என்­னிடம் ஆத­ரவு கேட்டு வந்தால் என்னால் நான் ஆத­ரவு வழங்க மாட்டேன். அதன்­போது என்­னு­டைய  உணர்வு புரிந்­து­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அந்­த­வ­கை­யி­லேயே  தமிழ் மக்­களின் உணர்வை நாங்கள் புரிந்து கொள்­கின்றோம். எனவே புதிய அர­சாங்கம் என்ற வகையில் நாங்கள்  தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள்  அவர்­களின்  தேவைகள் குறித்து  ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்­ததும்  எமது  அர­சாங்கம் வடக்கு கிழக்கில் பாரிய அபி­வி­ருத்­தி­களை செய்­தது. எனினும்  வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இன்னும்  குமு­ற­லுடன் இருக்­கின்­ற­மையை  புரிந்துகொள்கின்றோம்.  அதனால் எதிர்காலத்தில் அந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து விசேட அவதானம் செலுத்துவதுடன் அவற்றுக்கு தீர்வு வழங்குவது தொடர்பில்  ஆராய்வோம்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27