சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று கூடுகின்றது

Published By: Vishnu

21 Nov, 2019 | 10:00 AM
image

(எம்.மனோ­சித்ரா)

முன்னாள் ஜனா­தி­பதி ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று கட்­சியின் மத்­திய குழு கூட­வுள்­ளது. சம­கால அர­சியல் நிலை­வ­ரங்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்­கா­கவே இன்று மத்­திய குழு கூட­வுள்­ள­தாக அந்த கட்­சியின் பேச்­சாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வீர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

இன்­றைய மத்­திய குழு கூட்­டத்தில் சம­கால அர­சியல் நிலை­வ­ரங்கள் குறித்தும், சுதந்­திர கட்­சியின் அடுத்த கட்ட அர­சியல் முன்­னெ­டுப்­புக்கள் குறித்தும் ஆரா­யப்­படும். ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்­பார்த்த வெற்றி கிடைத்­துள்­ள­மைக்­க­மைய, புதிய ஜனா­தி­ப­தியின் வழி­காட்­டலின் கீழ் நாமும் பய­ணிக்க வேண்டும். அதற்­கேற்ற வகையில் இன்றை மத்­திய குழுவில் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கின்றோம் என்றார்.

இதன் போது பாரா­ளு­மன்ற கலைப்பு குறித்து வின­வி­ய­தற்கு பதி­ல­ளித்த அவர்,

சம­கால அர­சியல் நிலை­வரம் தொடர்பில் ஆராய்­வ­தற்­கா­கவே மத்­திய குழு கூட­வுள்­ள­தா­கவே அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற கலைப்பு குறித்து சுதந்­திர கட்சி இது வரையில் எந்த தீர்­மா­னத்­தையும் எடுக்­க­வில்லை. எனவே மார்ச் மாதத்­துக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தாக தீர்­மா­னித்து மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கோரப்­பட்டால் மாத்­தி­ரமே அது குறித்து ஆரா­யப்­படும்.

அவ்­வாறு அறி­விக்­கப்­பட்டால் அது தொடர்­பான யோசனை கட்­சியின் மத்­திய குழு கூட்­டத்தில் சமர்­ப்பிக்­கப்­படும். அதன் பின்­னரே அந்த யோசனை தொடர்பில் ஆராய்ந்து தீர்­வொன்று எடுக்­கப்­படும். எனவே பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு மூன்றில் இரண்டு கோரப்­பட்டால் அதற்கு ஆத­ர­வ­ளிப்­பதா இல்­லையா என்­பது தொடர்பில் இப்­போது கருத்து தெரி­விக்க முடி­யாது.

எனினும் பொதுத் தேர்­த­லுக்கு செல்­வ­தாக இருந்­தாலும் அதற்கு எவ்­வாறு முகங்­கொ­டுப்­பது என்­பது தொடர்­பிலும் ஏனைய அர­சியல் முன்­னெ­டுப்­புக்கள் தொடர்­பிலும் கட்சி தலைவர் மற்றும் உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் கலந்­தா­லோ­சிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

மத்­திய குழு கூட்டம் நிறை­வ­டைந்­ததன் பின்னர் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் அறி­விக்­கப்­படும். அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கவி;ல்லை. மத்திய குழு கூட்டத்தில் இதனைத் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04