6 புதிய ஆளுநர்கள் பதவியேற்பு 

Published By: Digital Desk 3

21 Nov, 2019 | 12:45 PM
image

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றைய தினம் சில மாகாண ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அந்தவகையில், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், தென்மாகாணம், வடமேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் மேல் மாகாணம் ஆகிய மாகாணங்களுக்கான ஆளுநர்கள்இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் நேற்றையதினம் அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்த நிலையில் அவர்கள் அனைவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன், கிழக்கு ஆளுநர் ஷான் விஜேலால் டி சில்வா, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வடமேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க, தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, ஊவா ஆளுனர் மைத்திரி குணரத்தின மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸ்ஸம்மில் ஆகியோரே இவ்வாறு இராஜினாமா செய்திருந்தனர்.

இதையடுத்து இன்றையதினம் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ம ஆளுநர்களின் விபரம் வருமாறு,

மத்திய மாகாண ஆளுநராக லலித் கமகே ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஊவா மாகாண ஆளுநராக ராஜா கொல்லுரே ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

தென்மாகாண ஆளுநராக வில்லி கமகே ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேல் மாகாண ஆளுநராக சீத்தா அரம்பேபொல ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39