இது இந்தியா விரும்பியதல்ல- மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா

Published By: Rajeeban

20 Nov, 2019 | 04:27 PM
image

தமிழில் ரஜீபன் 

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ,ஜனநாயகம் பொருளாதாரம், நல்லிணக்கம் ஆகியவற்றை தோற்கடித்துள்ளது.

இலங்கையின் கிளர்ச்சியை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய  ஏதேச்சதிகார  அரசாங்கம்( கோத்தபாய  இதில் முக்கிய பங்காற்றினார்)ஐக்கியதேசிய கட்சி அரசாங்கத்தின் உற்சாகமற்ற செயற்பாடுகளை கருத்தில் கொள்ளும்போது  ஐந்துவருடத்திற்கு பின்னர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளமை ஆச்சரியம் அளிக்கும் விடயமல்ல.இம்முறை கோத்தாவை தோற்கடிப்பதற்கான பாரிய கூட்டணியிருக்கவில்லை.

இலங்கையில் ஜனாதிபதிதேர்தலில் வெற்றிபெறுவதற்கு முக்கியமான தமிழ்  முஸ்லீம் மக்களின் வாக்குகளை வெல்வதாகும்,சிங்கள தொகுதிகளில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுவது வழமையாக காணப்படுவதே இதற்கு காரணம்.

கோத்தபாய ராஜபக்சவை தோற்கடிப்பதற்காக  புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்பிரேமதாச கோத்தபாயவின் சிங்கள வாக்குகளை கைபப்பற்றவேண்டிய நிலையில் காணப்பட்டார்.

ஆனால் எதிர்மாறான விடயம் இடம்பெற்றது.கோத்தாபாய தென்பகுதியில் சஜித்தை விட அதிக வாக்குகளை பெற்றார். 

இலங்கையின் கஜபா படையணியின் முன்னாள் கேர்ணலும்,மகிந்த ராஜபக்சவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தா விடுதலைப்புலிகளுடனான  முப்பது வருட யுத்தத்தை முடித்துவைத்தவர்களி;ல் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றார்.

19 வது திருத்தம் காரணமாக கோத்தாபய ஜனாதிபதி தேர்தலில்  எதிர்கட்சியை விட முன்னராகவே தேர்தலில் குதித்தார்.தேர்தலிற்கு ஆறு வாரங்கள் வரை எதிர்கட்சியினரால் வேட்பாளரை தெரிவு செய்ய முடியாத நிலைகாணப்பட்டது.

ஆரம்பத்தில் கோத்தபாய ராஜபக்ச தயக்கமடைந்த அறிமுகமாக, அரசியல்வாதியின் பாத்திரத்தில் நுழைக்கப்படும் அதிருப்தியடைந்த படைவீரராக அரசியலில் நுழைந்தார்.

ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கவரும் தன்மை -19 திருத்தத்திற்கு பின்னரும்  இன்னமும் நீடிக்கின்றது.

வெள்ளை வான் -  பத்திரிகையார் கொலை,ஊழல் குற்றச்சாட்டுகள், யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுடன் அவருக்கு தொடர்புகள் இருந்தபோதிலும் மகிந்தவின் தெய்வீக நிழலின் கீழ் கோத்தாவின் பிரச்சாரம் தீவிரம்பெற்றது, 

அவர் நீரிற்கு மேலாக   தலையை வைத்திருந்தமை கிட்டத்தட்ட ஒரு அற்புதமே.

19 வது திருத்தத்திற்கு ஏற்ப அவர் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடவேண்டியநிலைக்கும் தள்ளப்பட்டார்.

கொழும்பில் இந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கோத்தாவிற்கு கடவுள் அருளாக அமைந்தன.

இந்த தாக்குதல் தேசிய பாதுகாப்பினை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியது, ஒரு தசாப்த கால அமைதிக்கு  பின்னர் உள்ளக ஸ்திரதன்மை பாதிக்கப்பட்டது.அவ்வேளையில் ஆட்சியிலிருந்தவர்களின் மகத்தான தவறுகள், மக்கள் ராஜபக்சாக்களின் மீள் வருகைக்காக ஏங்கும்நிலையை உருவாக்கின.

கோத்தபாய ராஜபக்சவை பலவீனப்படுத்துவதற்காக நிறுத்தப்பட்டஇரு  வேட்பாளர்களால் அதனை சாதிக்க முடியவில்லை.

தீவிர தேசியவாதம் மற்றும் இராணுவத்தை போற்றும் உணர்வுபூர்வமான சூழலில் கோத்தபாய ராஜபக்ச மனித உரிமை மீறல்களிற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள படையினரை விடுதலை செய்வேன்,யுத்த காலமனித உரிமை மீறல்களிற்காக எந்த யுத்தவீரரும் விசாரணையை எதிர்கொள்ள மாட்டார் என அறிவித்தார்.இதன் மூலம் ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆணையகத்திற்கு இலங்கைஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளைஅவர் நிராகரித்தார்.

தேர்தலில் தாமதமாக நுழைந்த ஐக்கியதேசிய கட்சியின் சஜித்பிரேமதாச தன்னால் முடிந்தளவிற்கு முயற்சி செய்தார்.

ஆனால் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்திலிருந்து பொருளாதாரம்அபிவிருத்தியை நோக்கி மக்களின் கவனத்தை அவரால் திருப்ப முடியவில்லை. அவரது தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய நிகழ்ச்சி நிரலாக அவையே காணப்பட்டன, ஆனால்  பொருளாதாரம் அபிவிருத்தி ஆகியவற்றில்  அவரது அரசாங்கம் சொதப்பியதன் காரணமாக அந்த விடயங்களை முன்னிறுத்தி அவரால் வெற்றிபெறமுடியவில்லை.

விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சஜித்தின் தந்தை பிரேமதாச வறிய மக்களிற்கான வீடமைப்பு திட்டங்களிற்கு பெயர் பெற்றவர், சஜித்தும் அதனை பின்பற்ற முயன்றார்,ஆனால் இறுதியில்  அவரால் சிங்கள மக்களை  முடியவில்லை.

பிரதமர் மோடி மிகவேகமாக கோத்தாவை வாழ்த்தினார்.2015 இல் மகிந்த ராஜபக்சவை வெளியேற்றுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா காணப்பட்டது என்பது இரகசியமான விடயமல்ல.

மகிந்தராஜபக்ச தனது தோல்விக்கு காரணம் என ரோவின் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

பசில் ராஜபக்ச தாங்கள் அரசியல் பாதுகாப்பிற்காக இந்தியாவை நம்பியிருப்போம் எனவும் பொருளாதார அபிவிருத்திக்காக இந்தியாவை  நம்பியிருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் உக்கிரமடைந்திருந்த காலத்தில் இந்தியாவை  கடுமையாக விமர்சித்த  கோத்தபாயவின் தலைமைத்துவத்தின் கீழ் இது எவ்வாறு பரிணமிக்கும் என்பதற்கு காலமே பதில் சொல்லும்.

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளவருடன் இணைந்து செயற்படப்போவதாக புதுடில்லி தற்போது வலியுறுத்தியுள்ளது. 

இலங்கை தற்போது முக்கிய திருப்புமுனையில் உள்ளது.

கோத்தபாய தனது சகோதரரின் மேற்குலக எதிர்ப்பு இந்திய எதிர்ப்பு கொள்கையை பின்பற்றுவாரா? அல்லது தேர்தல் பிரச்சாரத்தில் சர்வதேச  உடன்படிக்கைகளில் இருந்து விலகுவேன் என தெரிவித்தமைக்கு மாறாக சமநிலையான கொள்கையை பின்பற்றுவாரா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54