விவாகத்தையும் காணி வாங்குவதையும் மிகக் கவனமாக பரிசீலிக்க வேண்டும்

Published By: Daya

20 Nov, 2019 | 11:21 AM
image

வினா  - 1

ஏழு வரு­டங்கள் கணவன் மனை­வி­யாக வாழாமல் பிரிந்து இருந்தால் அவர்­க­ளு­டைய விவாகம் தானா­கவே குலைந்­து­வி­டுமா?

விடை:

இல்லை, இலங்­கையில் விவாகம் ஒன்று குலை­ய­வேண்­டு­மானால் விவாகம் செய்­த­வரில் ஒருவர் இறந்தால் அல்­லது நீதி­மன்­றத்­தினால் விவா­க­ரத்து கட்­டளை வழங்­கப்­பட்­டி­ருந்தால் ஒழிய வேறு எந்­த­வ­ழி­யிலும் விவாகம் முடி­விற்கு வர­மாட்­டாது. ஆகவே ஏழு வருடம் மட்­டு­மல்ல அதற்கு மேற்­பட்ட காலத்­திற்கு இணைந்து வாழாமல் பிரிந்து வாழ்ந்­தாலும் விவாகம் ரத்­தா­காது.

வினா  - 2

எனது கணவர் வேறு ஒரு பெண்­ணுடன் கணவன் மனை­விபோல் பல வருடம் வாழ்ந்து வரு­கிறார். 15 வயது, 10 வயது பிள்­ளைகள் எனக்கு  இருக்­கின்­றனர். தற்­போது நீதிவான் நீதி­மன்ற கட்­ட­ளைப்­படி கணவன் எனக்கும் பிள்­ளை­க­ளுக்கும் மாதா மாதம் பரா­ம­ரிப்பு பணம் செலுத்தி வரு­கிறார். நான் அவ­ருக்கு விரோ­த­மாக விவா­க­ரத்து வழக்கு தாக்கல் செய்து விவா­க­ரத்தை பெற்றால் அதன் பின்னர் அவர் எனக்கும் பிள்­ளை­க­ளுக்கும் செலுத்­தி­வரும் மாதாந்த பரா­ம­ரிப்பு பணத்தை அவர் செலுத்த வேண்­டுமா?

விடை:

விவாகம் ஒன்று நடை­பெற்று அதன்­மூலம் அவர்கள் கணவன் மனை­வி­யாக வாழ்­வது சட்­டத்தின் கீழாகும். ஆகவே நீதி­மன்றம் விவா­க­ரத்தை வழங்­கினால் அதன் பின்னர் அவர் உங்­க­ளுக்கு பரா­ம­ரிப்பு பணம் வழங்கத் தேவை­யில்லை. ஆனால் அதற்கு புற­ந­டை­யுண்டு. அவை என்­ன­வெனில் விவா­க­ரத்து வழக்கில் கண­வனின் சோர வாழ்க்­கையின் கார­ணத்தால் விவா­க­ரத்து வழங்­கப்­ப­டு­கி­றது என்று நீதி­மன்றம் தீர்ப்பு அளித்­தி­ருந்தால் மனை­விக்கு விவாகம் சம்­பந்­த­மான நிரந்­தர பிரி­மனைப் பணத்தை நீதி­மன்றம் வழங்­கலாம். இதனை (PERMANENT ALIMONY) என அழைப்பர். ஆனால் பிள்­ளை­க­ளுக்கு அவர் தொடர்ந்தும் பிள்­ளை­களின் படிப்­புக்­காக மற்றும் தேவை­க­ளுக்­காக மாதா­மாதம் பரா­ம­ரிப்பு பணத்தைச் செலுத்­த­வேண்டும்.

இதற்கு காரணம் என்­ன­வெனில் மனைவி கண­வ­னிடம் இருந்து விவா­க­ரத்து பெற்­றாலும் பிள்­ளை­களின் தகப்பன் அவரே. அவர் அந்த நிலையில் இருந்து என்றும் விடு­பட முடி­யாது.

இவ்­வி­டத்தில் இன்­னு­மொரு விட­யத்­தையும் கூற­வேண்டும். விவா­க­ரத்து பெற்ற தாய் வேறு ஒரு­வரை விவாகம் செய்­தி­ருந்­தாலும் அவ­ளுக்கு விவா­க­ரத்துப் பெற்­ற­வரால் குழந்­தைகள் கிடைத்­தி­ருப்பின் அக்­கு­ழந்­தை­க­ளுக்கு மட்டும் தொடர்ந்தும் பரா­ம­ரிப்பு பணத்தை கோரலாம். ஆனால் அவ­ளுக்கு பரா­ம­ரிப்பு கோர­மு­டி­யாது.

விவா­க­ரத்தை எதிர்த்து கணவன் மேன்­மு­றை­யீடு செய்­துள்­ள­போதும் மேன்­மு­றை­யீடு நடை­பெறும் காலத்­திலும் பிள்­ளை­க­ளுக்கு பரா­ம­ரிப்பு பணம் செலுத்த வேண்டும்.

வினா  - 3

மனை­விக்கும் பிள்­ளை­க­ளுக்கும் பரா­ம­ரிப்பு செலுத்­தாமல் தவிர்க்கும் சந்­தர்ப்­பங்கள் சட்­டத்தில் உண்டா?

விடை:

1999 ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க பரா­ம­ரிப்பு சட்­டத்தின் கீழ் நீதி­மன்றம் வழங்­கு­கின்ற பரா­ம­ரிப்பு தொகையை ஒருவர் தொழில் ஒன்றில் இருக்கும் போதே செலுத்த வேண்டும் என்று கூற­வில்லை. அதற்கு பதி­லாக தொழில் புரி­யக்­கூ­டிய சக்தி இருப்பின் அவர் கட்­டாயம் பரா­ம­ரிப்பு செலுத்­த­வேண்டும். எனவே வரு­மானம் இல்லை என்­பது பரா­ம­ரிப்பு கட்­ட­ளையை பாதிக்­காது கட்­டாயம் செலுத்­த­வேண்டும்.

வினா  - 4

மனைவி சோர வாழ்க்கை வாழ்­கிறார் என்­பதை நீதி­மன்­றத்­திற்கு நான் நிரூ­பித்தால் அவ­ளுடன் வாழும் எனது குழந்­தை­களின் பரா­ம­ரிப்பை (CUSTODY) நான் நீதி­மன்­றத்­திடம் கோர­லாமா?

விடை:

மனைவி சோர வாழ்க்கை வாழ்­வதை நிரூ­பித்தால் அவ­ளிடம் இருந்து விவா­க­ரத்தைக் கோர புரு­ஷ­னுக்கு உரி­மை­யுண்டு. அவர் அதனை நீதி­மன்­றத்தில் நிரூ­பித்தால் நீதி­மன்றம் அவ­ளுக்கு பரா­ம­ரிப்பு பணம் செலுத்­து­மாறு கட்­ட­ளை­யி­டாது. ஆனாலும் குழந்­தை­களை தனது பரா­ம­ரிப்பில் வைத்­தி­ருக்க நீதி­மன்­றத்தை தகப்பன் கேட்­கலாம். நீதி­மன்றம் நன்கு ஆராய்ந்து அதனை வழங்­கு­வது உண்டு. அல­ரம்மா எதிர் நட­ராசா வழக்கில் பெண் குழந்தை தகப்­ப­னது பாது­காப்பில் வைத்­தி­ருக்க இடம் கொடுக்­கப்­பட்­டது.

இன்­னு­மொரு விட­யத்­தையும் கவ­னிக்க வேண்டும்.  

பரா­ம­ரிப்பு பணத்தை பெறும் வழக்கு நீதிவான் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் பிள்ளை ஒன்றின் பாது­காப்பை (Custody) மாவட்ட நீதி­மன்­றத்­தி­லேயே  கேட்க வேண்டும். ஆயினும் இரு பகு­தி­யாரும் இணங்கிக் கொண்டால் பாது­காப்பு வழக்கை மாவட்ட நீதி­மன்றில் தாக்கல் செய்­யாமல் நீதிவான் நீதி­மன்­றத்­திற்கு இதனை எடுத்­துக்­கூறி சமா­தா­ன­மான முறையில் இதனைப் பெற்றுக் கொள்­ளவும் முடியும்.

இன்னும் சிலர் கேட்­கின்ற வினா என்­ன­வெனில், மாதா மாதம் பரா­ம­ரிப்பு பணத்தை செலுத்­தாமல் ஒரே தட­வையில் சில இலட்­சத்தைச் செலுத்தி மனை­வியின் பரா­ம­ரிப்பு  வழக்கில் இருந்து தப்­ப­லாமா? என்­ப­தாகும். இரு­ப­கு­தி­யாரும் நீதி­மன்­றமும் உடன்­பட்டால் அதனைச் செய்­யலாம். ஆனால் பிள்­ளை­க­ளுக்கு மாதம் தோறும் கொடுக்க வேண்­டிய பணத்தை ஒரு தொகை­யாக கொடுத்து தப்ப நீதி­மன்­றங்கள் இடம் கொடுப்­ப­தில்லை. ஏனெனில் ஒரு குழந்தை பிள்­ளையின் பரா­ம­ரிப்பு பல  வருட காலம் தகப்­பனில் தங்­கி­யுள்­ளது. மேற்­கல்வி கற்­ப­தற்கு கூட தகப்­பனே பணம் செலுத்­த­வேண்டும்.

சிலர் நீதி­மன்­றத்தில் விவா­க­ரத்து பெற்ற மனை­வியின் குறையைச் சுட்­டிக்­காட்டி குழந்­தை­களை பார்­வை­யிட அனு­ம­திப்­ப­தில்லை என்றும் நீதி­மன்ற கட்­ட­ளைப்­படி அவர்­களை தான் அழைத்­து­வர இடம் கொடுப்­ப­தில்லை என்றும் கூறி பிள்­ளை­க­ளுக்கு பரா­ம­ரிப்பு பணத்தை ரத்­துச்­செய்­யு­மாறு நீதி­மன்­றத்தைக்  கேட்­ப­துண்டு.

நீதி­மன்­றங்கள் இதற்கு ஒரு­போதும் இணங்­கு­வ­தில்லை. ஏனெனில் அம்மா செய்யும் தவ­றுக்கு பிள்­ளைகள் தண்­ட­னைக்கு ஆளா­கக்­கூ­டாது என்ற கொள்­கையும் பரா­ம­ரிப்பு சட்­டத்தில் அடக்­கப்­பட்­டுள்­ளதால் நீதி­மன்றம் இக்­கோ­ரிக்­கையை பரி­சீ­லிப்­ப­தில்லை.

மேலும் கூற­வேண்­டி­யது என்­ன­வெனில், கர்ப்­பி­ணி­யாக இருக்கும் மனை­வியின் வயிற்றில் உள்ள குழந்தை தனது சம்­பந்­தத்தால் உரு­வா­கிய குழந்தை இல்லை என்று கூறி தாய்க்கும் குழந்­தைக்கும் பரா­ம­ரிப்பு பணத்தை செலுத்­த­மு­டி­யாது என்று சிலர் கூறு­வது உண்டு. பிறந்த குழந்­தைக்கே பரா­ம­ரிப்புப் பணம்  கோரலாம். பிறக்கப் போகும் குழந்­தைக்கு கோர­மு­டி­யாது.

சாட்­சியல் சட்­டத்தின் எடு­கோ­ளின்­படி (114) ஒரு பெண் விவா­க­ரத்து பெறாமல் இருக்­கும்­போது 280 நாட்­க­ளுக்­கி­டையில் குழந்தை பெற்­றெ­டுத்தால் அக்­கு­ழந்­தையின் தகப்பன் அவ­ளது கணவன் என்றே சட்டம் ஊகம்  கொள்ளும். ஆகவே மேலே­யுள்ள இரண்டு கார­ணங்­க­ளையும் சலா­லுக்கு உட்­ப­டுத்தி வெற்றி பெறு­வது கஷ்டம்.

கண­வனால் மனை­வியின் பெய­ருக்கு மாற்­றப்­பட்ட காணி ஒன்றை மீண்டும் மனை­வி­யினால் பெற­மு­டி­யுமா?

வினா - 5 சில பெண்கள் விவா­கத்தின் போது தனக்கு வழங்­கப்­பட்ட காணி (சீத­ன­மல்­லாத) ஒன்றை கண­வனின் வேண்­டு­கோளின் படி கண­வ­னுக்கு மாற்றிக் கொடுக்­கிறாள். பின்னர் கணவன் தனது மனை­வி­யையும் பிள்­ளை­க­ளையும் வெளியே துரத்தி விடு­கிறான். இச்­சந்­தர்ப்­பத்தில் மனைவி அவ்­வாறு மாற்­றிக்­கொ­டுக்­கப்­பட்ட காணியை கண­வ­னிடம் இருந்து மீளப்­பெ­ற­லாமா?

விடை:

மனை­வி­யா­னவள் தனது சொந்தக் காணியை புரு­ஷ­னுக்கு கொடை அளிக்­கும்­போது மிகக் கவ­ன­மாக அதனைச் செய்­ய­வேண்டும். கட்­டாயம் மனை­வியின் சீவிய உரித்­துக்­குட்­பட்­ட­தா­கவே கூறி அக்­கா­ணியை கைய­ளிக்­க­வேண்டும். வங்­கியில் இருந்து கடன்­பெற வேண்­டு­மானால் அதற்கு சீவிய உரித்தை வைத்­துக்­கொண்டு காணியை எழுதிக் கொடுக்க வேண்டும் என்ற நியதி இல்லை. அதற்குப் பதி­லாக அவள் கண­வனின் கட­னுக்கு பிணை­யா­ளி­யாக உறு­தியைக் கொடுக்­காமல் எழுத்­தி­லான அனு­ம­தியை வங்­கிக்குக் கொடுக்­கலாம்.

கடனைப் பெற்ற புருஷன் பின்னர் மனை­விக்குக் கொடுமை செய்து அல்­லது வஞ்­சித்து செயற்­பட்டால் புரு­ஷ­னுக்கு விரோ­த­மான அன்பு, பட்சம், கருணை கார­ண­மாகக் கொடுக்­கப்­பட்ட கொடை உறு­தியை மீளப்­பெற்றுத் தரு­மாறு வழக்கை தாக்கல் செய்­யலாம். சீவிய உரித்­துக்கு உட்­பட்ட உறு­தியை இவ்­வாறு மீளப்­பெற முடி­யாது.

தற்­போது கொடை­ய­ளித்த காணியை மீளப்­பெ­றுதல் சம்­பந்­த­மாக 2017 ஆம் ஆண்டு 5

ஆம் இலக்க சட்டம் என்ற ஒரு சட்டம் அமுலில் உள்­ளது. “Revocation of irrevocable Deeds of gift on the Ground of Gross Ingratitude” என்­பது அச்­சட்­டத்தின் பெய­ராகும்.

இச்­சட்­டத்தின் கீழ் நன்­றி­யற்ற செயல் Ingratitude என்ற வழக்­கெழு  கார­ணத்தின் கீழ் இவ்­வ­ழக்கை நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­ய­வேண்டும். இதற்கு பின்­வரும் நிபந்­த­னைகள் உண்டு. “மீளப் பெறும் உறு­தி­யான கொடை உறுதி கொடை பெற்ற வருக்கு 10 வரு­டங்­க­ளுக்­கி­டையில் எழு­தப்­பட்டு இருக்­க­வேண்டும்” மேலும் நன்றி கெட்ட செயல் வழக்­கெழ காரணம் இரண்டு வரு­டங்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்டும் இருக்­க­வேண்டும்.” இந்­நி­பந்­தனை முக்­கி­ய­மாகும்.

ஆகவே கணவன் ஒரு­வ­ருக்கு கொடை அளிக்­கப்­படும் காணியில் மனை­வியின்  சீவிய உரித்­துக்கு என எழு­தப்­ப­டாமல் மேலே  கூறி­ய­படி கொடை உறு­தியை மனைவி எழு­திக்­கொ­டுக்­கலாம்.

வினா - 6. ஒரு காணி இரண்டு பகு­தி­யா­ருக்கு வெவ்­வேறு நாட்­களில் விற்­கப்­ப­டு­கி­றது. இக்­கா­ணி­களின் செல்­லு­ப­டி­யாகும் தன்மை பற்றி பின்னர் போட்டி ஏற்­பட்டு வழக்கு தாக்கல் செய்­ய­ப்­ப­டு­கி­றது. இவ்­வ­ழக்கில் கவ­னிக்­கப்­பட வேண்­டி­யவை என்ன?

விடை: காணி ஒன்றை வாங்­கு­பவர் தான் வாங்­கிய அல்­லது தனக்­க­ளிக்­கப்­பட்ட கொடையை காணிக் கந்­தோரில் பதிவு செய்ய வேண்டும். அவ்­வு­று­தி­களில் சட்ட வலுக்­கொண்­டது எது? என்­பது எவற்றைக் கொண்டு கவ­னிக்­கப்­ப­டு­கி­றது? என்­பதை முதலில் அறிய வேண்டும்.

போட்­டி­போடும் உறு­தி­களில் எந்த உறுதி சட்ட வலுக்­கொண்­டது என்­பதைக் காண பின்­வ­ரு­வன­வற்றைக் கவ­னிக்க வேண்டும்.

1) உறு­திகள் இரண்டும் பெறு­ம­தி­மிக்க மதி பல­னுக்கு விற்ற உறு­தி­யாக இருக்க வேண்டும்.

2) அக்­கா­ணியின் மூல உறுதி பதி­யப்­பட்ட இதழில் காணிக் கந்­தோரில் பதி­யப்­பட்­டி­ருக்க வேண்டும்.

3) எதிர் உரித்து கொண்டு இருக்க வேண்டும்.

மேற்­படி நிபந்­த­னை­களில் இரண்டு உறு­தி­களில் எந்த உறுதி முதன் முத­லாக காணிக் கந்­தோரில் உரிய இதழில் பதி­யப்­பட்­டதோ அவ்­வு­று­தியே முன்­னு­ரிமை கொண்டு விளங்கும்.

இரண்டு உறு­தி­களில் ஒன்று மதி­ப­ல­னுக்கும் (விற்றல் உறு­தி­யா­கவும்) மற்­றை­யது கொடை (Gift) உறு­தி­யா­கவும் இருப்பின் நீதி­மன்றம் ஏனைய விட­யங்­க­ளையும் கவ­னித்து அவை எதிர் உரித்து கொண்­ட­வையா? என பார்க்க வேண்டும்.

சில வேளை­களில் முதன் நிலை நீதி­மன்­றங்கள் இவற்றைக் கவ­னிப்­பதில் தவறி விடு­கின்­றன. ஆகவே மேன்­மு­றை­யீட்டில் இவற்றை திருத்­தலாம். அதற்­கு­ரிய வழக்கை ஆராய்ந்தே தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்­வி­டத்தில் ஒரு வினா எழு­கி­றது என்­ன­வெனில், கட்­டாயம் ஓர் உறுதி காணிக் கந்­தோரில் பதிவு செய்­யப்­ப­ட­வேண்­டுமா? என்­பதே அது­வாகும். இது கட்­டாயம் அல்ல.

ஆனால், ஒரு காணிக்கு இரண்டு உறு­திகள் இருக்­கும்­போது அவற்றில் எந்த உறுதி பெறு­ம­தி­யான மதி­ப­ல­னுக்கும் உரிய இதழில் பதி­யப்­பட்டும் இருந்­தது எனக் காண்­பது அவ­சி­ய­மா­கி­றது. அப்­போ­துதான் உரிய இதழில் பதிவு செய்­யப்­ப­டாத உறு­தியை ரத்­துச்­செய்­யலாம் என்­ப­தற்­குத்தான் நீதி­மன்­றங்­களில் வழக்­குகள் தாக்கல் செய்­யப்­ப­டு­கின்­றன.

ஒரு காணிக்கு இரண்டு உறுதி

எப்­படி எழு­தப்­ப­டு­கி­றது?

பண்டா எதிர் அலித்­தம்பி வழக்கில் (I5 NLR 177) ஆரா­யப்­பட்­டது. இவ்­வ­ழக்கில் தீர்க்­கப்­பட்­டது என்­ன­வெனில் மூல­உ­று­தியை பரீட்­சிக்­காமல் எழு­து­வ­தாலும் பணத்­திற்­காக எழு­வதும் நடை­பெ­று­வதால் இந்­நிலை ஏற்­ப­டு­கி­றது என்­பது அவ­தா­னிக்­கப்­பட்­டது.

ஜேம்ஸ் எதிர் கரோலிஸ் (17 NLR 76) ஆம் வழக்கில் நீதி­மன்றம் பின்­வரும் உதா­ர­ணத்தைக் காட்­டி­யுள்­ளது.

“இந்த வழக்கில் X என்­பவர் தனது காணியை Y என்­ப­வ­ருக்கு விற்றார். X இறந்­ததும் X ன் வழி­யு­ரி­மை­யா­ள­ரான Z அந்தக் காணியை A என்­பவ­ருக்கு விற்றார். ஆனால் Y அந்த உறு­தியை உரிய முறைப்­படி காணிக் கந்­தோரில் பதி­ய­வில்லை. உண்­மையில் Z அந்தக் காணியை A என்­ப­வ­ருக்கு விற்­ப­தற்கு முன்பே X என்­பவர் அக்­கா­ணியை  Y க்கு விற்று இருந்தார். ஆயினும் நீதி­மன்றத் தீர்ப்பு பின்­வ­ரு­மாறு இருந்­தது.

மேற்­படி காணி X ன் வழியில் வந்­தது. ஆகவே Y யின் உறு­தியும் A யின் உறு­தியும் உதிர் உரித்துக் கொண்­ட­வை­யாக விளங்­கு­கின்­றன. A பெறு­ம­தி­யான மதி­ப­ல­னுக்கே காணியைப் பெற்றார் என்றும் Y யின் உறுதி முறைப்­படி பதி­வு­செய்­யப்­ப­ட­வில்­லை­யென்றும் A யின் உறுதி முறைப்­படி உரிய இதழில் பதிவு செய்­யப்­பட்­ட­ப­டியால் காணி A க்கு சொந்தம் என்­றது.

மேல் உள்ள வழக்கின் தீர்ப்பில் இருந்து காணியை வாங்­கு­ப­வர்கள் ஒரு விட­யத்தைக் கவ­னத்தில் எடுக்­க­வேண்டும். உறு­தியின் ஆரம்­ப ­முதல் காணியை வாங்­கும் ­வ­ரையும் நடை­பெற்ற உறு­தி­களின் மாற்­றத்தை ஆராய்ந்து பார்த்தே காணியை வாங்­க­வேண்டும். இல்­லையேல் சில­வேளை காணியின் உரித்து இல்­லாமல் போய்­விடும்.

தொகுப்­புரை

இன்று  சாதா­ர­ண­மாக சமூக வாழ்க்­கையில் காணப்­படும் பரா­ம­ரிப்பு பற்­றிய ஒரு சிறு கட்­டு­ரையும் காணி சம்­பந்­த­மான சிறு கட்­டு­ரையும் எழுதியுள்ளேன். இவ்­வி­ரண்டு விட­யமும் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் வாழ்க்­கையில் முக்­கிய இடம்­பெ­று­கின்­றன. ஆகவே விவா­கத்­தையும் காணி வாங்­கு­த­லையும் மிக கவ­ன­மாகப்  பரிசீலித்தே வாங்கவேண்டும். இல்லையேல் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டும்.

- கே.ஜீ. ஜோன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54